பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாரி 477 பட்டும் எடுத்திருவ பரு நகையும் செஞ்சிருவ பட்டு மடிச்சுடுத்தி பரு நகையும் மேல் பூட்டி பட்டணமும் வந்தாலும் பட்டணத்தில் பேஞ்ச மழை பட்டு நனைஞ்சிருமே பரு நகையும் மங்கிடுமே கல்லுகட்டி வில்ல மரம் கைலாச தீர்த்துக் கரை கண்டா வருவ மிண்ணு கைத்தாப்பா போட்டடைச்சே செங்கட்டி வில்வ மரம் செவலோகத் தீர்த்தகரை தெரிந்தா வருவோமின்னு தெருத்தாப்பா போட்டடைச்சே குறிப்பு: சிறையில் இறந்தவன் பிணத்தை கும்பினியார் காலத்தில் உறவினரிடம் கொடுக்காமல் தாங்களே எரித்து விடுவார்கள். மகன் பூனூல் போட்டு ஒற்றை வேட்டி கட்டி பிணத்தை குளிப்பாட்ட நீர் கொண்டு வருவான். அதையெல் லாம் ஒரு வெள்ளைப்பட்டாள அதிகாரியான கர்னல் செய் தானோ என்று மனைவி வினவுகிறாள். சிறையில் இறந்தவனுக்கு வீட்டுக் கருமாதி செய்து, ஒரு குருத்தோலையை இறந்தவனது அடையாளமாக வைத்து அழுது எரிப்பார்கள். அவன் சிறையிருந்த இடத்துக்கு அடிக்கடி போக முடியாது. தாழ்ப்பாள் போட்டிருக்கும். இப்பொழுது விடுதலை பெற்று அவன் சென்றுள்ள கைலாசத்துக்குப் போய் அவனோடு இருக்கலாமென்றால், அங்கும் தாழ்ப்பாள் போட்டிருக்கிறது. அவளால் போக முடியாது. தவசப் பொங்கல் சீருமில்லை தந்தை இறந்து விட்டார். மகளுக்கு மணமாகி அயலூரில் வாழ்கிறாள். பொங்கல்தோறும் அவளுக்கு சீர் வரிசைகள் அனுப்பி வைப்பார். அவளுக்குத் தமையன்மார் உண்டு. ஆனால் தந்தையைப்போல் அன்பாக சீர் அனுப்பி வைப்பார்களா? A 519 - 31