பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

478 தமிழர் நாட்டுப் பாடல்கள் அவர்கள் மறந்தாலும் மதினிமார் அதனை நினைவூட்டுவார் களா? தாய் சொன்னாலும் காதில் ஏறுமா? தந்தை போய்விட்டால் மகளுக்கு அருமை பெருமை ஏது? இதனை நினைத்து மகள் உருகுகிறாள். வடக்கே கரத்தோட்டம் வாழப்பூப் பூந்தோட்டம் வளர்த்தவர் இருக்கும் வரை வரிசைப் பொங்கல் சீருவரும் வளர்த்தவர் காலம் போக வாழ மடலிழந்தேன் வரிசைப் பொங்கல் சீரிழந்தேன் தெக்கே கரத்தோட்டம் தென்ன மரம் பூந்தோட்டம் தேடுனவர் இருக்கும் வரை தெவசப் பொங்கல் சீருமுண்டு தேடுனவர் காலம் போக தென்ன மடலுமில்லை தெவசம் பொங்கல் சீருமில்லை குறிப்பு: கொங்கு வேளாளர் சமூகத்தில் மணமான தம்பதிகளை வேறே வைப்பார்கள். அப்பொழுது வீட்டுக்கு வேண்டிய எல்லா சாமான்களையும் பெண்ணின் தந்தை கொடுக்க வேண்டும். அதன்பின், பொங்கல்தோறும் சீர் வரிசைகள் கொடுப்பார்கள். பெண்ணுக்கு குழந்தை பிறந்து சம்பந்தம் காணும் வரை சீர் கொடுக்க வேண்டும். உதவியவர்: நல்லம்மாள் சேகரித்தவர். இடம்: கு. சின்னப்ப பாரதி சேலம் மாவட்டம் கூலிப்படி கணவன் இறந்து போனான். குடும்ப நிருவாகம் அவளுடைய மைத்துனர்கள் கைக்கு மாறிவிடும். அதன் பிறகு அக்குடும்பத்தில் உரிமை யிழந்தவளாய், மைத்துனர்கள் கையால் படி வாங்கித் தின்னும் நிலை அவளுக்கு ஏற்படும். மேலும் வேலைக்காரியைப் போல வேலை செய்தால்தான் அக்குடும்பத்தில் அவளுக்குச் சோறு கிடைக்கும். வீட்டின் தலைவி சொத்துரிமையின்மையால், தன் கணவனது மறைவிற்கு பின்