பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

492 தமிழர் நாட்டுப் பாடல்கள்

கோயிலுக்கு மேல் புறமா குயிலி புலம்பிட்டா கோவில் விரிசல் உடும் கொக்கி ரெண்டும் பூட்டு உடும் கோயிலுக்கு கீழ்புறமா குயிலா புலம்பிட்டா கொடுமைகளும் வெப்பம் ஆறும் சருவத்துப் பாலுகொண்டு சாயாத சாவல் கொண்டு சாமி நதி போனாலும் சாமி நதிப் பாப்பாரு சலித்தவ வரான்னு சாமியைச் சாத்து மென்பார் தாழிரண்டும் போடுமென்பார் சாமிக்கு மேல்புறமா தங்கா புலம்பிட்டா கதவு ரெண்டும் பூட்டு உடும் காலிரெண்டும் நீங்கிவிடும் சாமிக்கு கீழாக தங்கா புலம்பிட்டா தங்கா குறை எப்ப ஆறும்

வட்டார வழக்கு : சாவல்-சேவல்; விரிசல்-உடைப்பு; உடும்-விடும்.

உதவியவர்: இடம்: செல்லம்மாள் சேலம் மாவட்டம். சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி

 மைந்தனை பறிகொடுத்தோம்

குழந்தைக்கு நோய்க்கண்டது. வைத்தியன் முடிதாக்கி விட்டது என்கிறான். சேலம் மாவட்டத்தில் இப்படிக் கூறுவார்கள். நெல்லை மாவட்ட வைத்தியன் சீர்தட்டிவிட்டது என்பான். இந்நோய் காண்பதற்கு விநோதமான காரணத்தையும் கூறுவார்கள். கணவனோடு உடலுறவு கொண்ட மனைவி, குழந்தைக்குப் பால் கொடுத்தால் இந்நோய் கண்டு விடுகிறதாம். வீட்டுக்கு விலக்கமான பெண் குழந்தையைத் தொட்டுவிட்டால் இந்நோய் உண்டாகி விடுகிறதாம். பல பெற்றோர்கள் இந்த