பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

494 தமிழர் நாட்டுப் பாடல்கள்

மல் இறந்து விடுகிறார். அவர் மறைவுக்கு வருந்தி அவர் மகள் ஒப்பாரி சொல்லி அழுகிறாள்.

நாட்டு வவுத்து வலி நாமக்கல்லு பண்டிதம் நல்ல வழி ஆகுமின்னு நாடெங்கும் போய்ப் பார்த்தும் நடுச்சாமி ஆனீங்களா சீமை வவுத்து வலி சீரங்கத்துப் பண்டிதம் தீரு கடை ஆகுமின்னு சீமையெங்கும் போய்ப் பார்க்க தீரு கடை ஆகாமே சொல்லவிச்சுப் போனிங்களா

வட்டார வழக்கு: வவுத்துவலி-வயிற்றுவலி, பண்டிதம்- வைத்தியம்; தீருகடை-குணமடைதல்.

குறிப்பு: இப்பாட்டை உதவிய பாப்பாயியின் தந்தை வயிற்றுவலியால் மரணமடைந்தார். அவளே அச்சமயம் பாடிய பாடல் இது. அவளுக்குக் கல்வி அறிவு கிடையாது.

உதவியவர்: இடம்: பாப்பாயி சேலம் மாவட்டம். சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி

   கவலைக்கு ஆளானேன்
 தாய் இறந்துவிட்டாள்; மகள் விதவை. அண்ணனுக்கு மணமாகிவிட்டது. மதினி, மணமாகக் காத்திருக்கும் 

இப்பெண்ணை அன்பாக நடத்துவதில்லை. கலியாணமானால், தாயார் கப்பல் கப்பலாகச் சீர் அனுப்புவாள். அக்காலமெல்லாம் போய்விட்டது. இனி உணவு, உடைக்குக் கூடப் பஞ்சம் வந்துவிடும். தாய் மறைந்தபின் தனது வாழ்வில் ஏற்படப் போகும் மாறுதல்கள் அவளை வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. அவள் ஒப்பாரி சொல்லி அழுகிறாள்.

   வால் மிளகும் சீரகமும் 
   வரிசை வரும் கப்பலிலே