பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

498 தமிழர் நாட்டுப் பாடல்கள்

தெரிவிப்பதோடு வருங்கால ஜமீன்தாருக்குப் புத்தியும் புகட்டுகிறது இப்பாட்டு.

கண்ணு முழியழகர் கருப்புக் கோட்டித் தானழகர் பூடுசுக் காலழகர்-இந்தப் பூலோகம் எல்லாம் கண்டதில்லை சிவகிரி மகாராஜா-நம்ம செல்லத்துரைப் பாண்டியர் தங்கக் குணக்காரர்-அவர் எங்கும் புகழானவர் பந்தயக் குதிரை ஏறி-அவர் பட்டணங்கள் சுத்தையிலே எதிர்பார்த்த பெண்கள்-அதை எண்ணவும் முடியாதய்யா சிவகிரி மகாராஜா-நம்ம செல்லத்துரைப் பாண்டியர் தங்கக் குணக்காரர்-அவர் எங்கும் புகழானவர் ஏழாம் திருநாளாம் எண்ணக காம்பு மணடபமாம் கண்ணாடிச் சப்பரத்தை-நம்மதுரை கண் குளிரப் பார்க்கலாமே சிவகிரி மகாராஜா-நம்ம செல்லத் துரைப் பாண்டியர் தங்கக் குணக்காரர்-அவர் எங்கும் புகழானவர் ஐயா வட புறமாம் அம்மையாத்தா தென் புறமாம் ஊடே வர குணராம் உயர்ந்ததொரு கோபுரமாம் சிவகிரி மகாராஜா-நம்ம செல்லத்துரைப் பாண்டியர் ஈசன் விதியாலே மோசம் வரலாச்சுதே சென்ட்ரல் ஆஸ்பத்திரியில்-அவர் சீக்காய் இருக்கையிலே பட்டணத்து டாக்டரும் பாங்குடனே வந்தல்லவோ