பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 தமிழர் நாட்டுப் பாடல்கள் ஆமணக்கங் கொட்டை முதல் காடைக் கண்ணி பருத்தி விதை-மாரிக்கு பாங்கான விக்க வகை இட்டுச் செய்தவர்க்கு எம காளி துணை செய்வாள் மக்களைப் பெற்றவர்கள் மாரி கதை தானறிவார் அறிந்தோர் அறிவார்கள் அம்மன் திருக் கதையை தெரிந்தோர்க்குத் தெரியுமம்மா! - ஆயிரங்க தேவி திருக் கதையை ஒரு கண்ணு ரெண்டு கண்ணு உலகத்து மானிடர்க்கு ஆயிரம் கண்ணுடையா அழகில் சிறந்த கண்ணு பதினாயிரம் கண்ணுடையா பாதகத்தி நீலியவ இருசி வயத்திலேயும், எமகாளி பிறந்திடுவாள் மலடி வயத்திலேயும் மாகாளி பிறந்திடுவாள்-மாரிக்கு ஆறு வண்டி நூறு சட்டம் அசையா மணித் தேருகளாம். தேரை நடத்தியல்லோ-மாரி சித்தரங்கள் பாடி வாரா-மாரிக்கு பூட்டுன தேரிருக்கப் புறப்பட்டாள் வீதியிலே நாட்டுன தேரிருக்க-ஆயிரம் கண்ணா நடந்தானே வீதியிலே வீதி மறித்தாளம்மா-மாரி வினை தீர்க்கும் சக்தியல்லோ! பிறந்தா மலையாளம்-அவ போய் வளர்ந்தா-ஆள்பாடி இருந்தாள் இருக்கங்குடி-மாரி இனி இருந்தா லாடபுரம்