பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5 1 6 தமிழர் நாட்டுப் பாடல்கள் வில்லை. எமனை எதிர்த்து நிற்கும் வலிமையைக் கொடுக்க தெய்வங்களால் முடியவில்லை. அவள் கணவனை எமன் பிடித்துக் கொண்டு போய் விட்டான். பூசை பலிக்கவில்லையே என்ற ஏமாற்றத்தில் அவள் அழுகிறாள். பழனிக்கு மேல் புறமாய் பன்னிரெண்டு கோபுரமும் படிக்குப்படி பூசை செஞ்சேன்! பாவிபடும் தொந்தரவை பகவான் அறியலையே! செஞ்சிக்கு மேல்புறமாய் செல்வரெண்டு கோபுரமாம் சிலைக்குச் சிலை பூசை செஞ்சு சிவனோடு வாதாடி-இந்தச் செல்விபடும் தொந்தரவை சிவனும் அறியலையே! வட்டார வழக்கு: செஞ்ச-செய்தேன்; சிலைக்குச் சிலைசிலைகளுக்கெல்லாம். உதவியவர்: இடம் : கவிஞர் சடையப்பன் அரூர், சேலம் மாவட்டம். அண்ணியாள் அவதி கணவனை இழந்தபின் புகுந்த வீட்டில் மாமியார், கொழுந்திமார் பேசும் பேச்சுத் தாங்க முடியாது போய்விட்டது. சில நாட்கள் அமைதியாக இருக்க வேண்டுமென்று அவள் பிறந்த வீடு சென்றாள். அங்கே அண்ணிமார்கள் தவித்த வாய்க்குத் தண்ணீர் ஊற்றக்கூட மனமில்லாமல் முகத்தைச் சுளிக்கிறார்கள். மழை பெய்து செடிக்குப் பாயும் தண்ணீரைக் கூட குடிக்கவிட அவர்களுக்கு மனமில்லை. புகுந்த வீட்டில் உள்ள உரிமைகூட பிறந்த வீட்டில் இல்லாது போய் விட்ட்து. சில ஆண்டுகள் முன்பு வரை சட்டப்படி அவளுக்கு ஒரு உரிமையும் இல்லைதானே! சமூக வழக்கப்படி இன்னும் பிறந்த இடத்தில் தாய் தந்தையர் மறைவுக்குப் பின் மகளுக்கு எவ்வித உரிமையும் இல்லை. இதை எண்ணி அழுதுகொண்டே அவள் புகுந்த வீட்டிற்குத் திரும்பி விடுகிறாள்.