பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/503

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாரி 517 பொன்னு மழை பெய்யும் பூஞ்செடிக்கு நீர் பாயும் பொறந்த எடத்துத் தண்ணியின்னும் பூந்து குளிக்கப் போன பெரியண்ணிங்கிறவ பூச்சி விழுந்திச்சு இன்னா புதுப்பாசி கப்பிச்சுன்னா போட்டேனே பொந்தியிலே புடிச்சனே தடம் வழியே! தங்க மழை பெய்யும் தாமரைக்கு நீர் பாயும் வளர்ந்த வீட்டுத் தண்ணியின்னும் வாரிக்குடிக்கா போனா சின்னண்ணி இங்கிறவ வண்டு படர்ந்ததின்னா மலைப் பாசி கப்பிச்சின்னா வடிச்சனே கண்ணிரை வந்திட்டன் வளநாடு. வட்டார வழக்கு: பொறந்த-பிறந்த, இன்னும்- என்றும்; பூந்து-புகுந்து; என்கிறவள்-இன்னா என்றாள்; பொந்திவயிறு, புடிச்சன்-பிடித்தேன்; கப்பிச்சின்னா-கப்பித்து என் றாள்; படர்ந்ததின்னா-படர்ந்தது என்றாள். சேகரித்தவர்: இடம் : கவிஞர் சடையப்பன் சேலம் மாவட்டம். மதுரை நகரிழந்தேன் அவளது சகோதரன் ரயில் வண்டி ஒட்டுகிற டிரைவர். அவன் அடிக்கடி இவள் இருக்கும் ஊருக்கு வருவான். இவளுக்கு சற்றே உடல் நலமில்லை என்றாலும், பெற்றோர் உறவினர் எல்லாம் ஓடோடியும் வந்து விடுவார்கள். அண்ணன் இறந்து போனான். அண்ணனை மட்டுமா அவள் இழந்தாள்? அண்ணன் ஒட்டிய இரயில் வண்டி செல்லுகிற மதுரை, சேலம், செஞ்சி ஆகிய நகரங்களை எல்லாம் அவள் இழந்து விட்டாள். அவ்வூர்களில் வாழும் உறவினர்களுக்குச் செய்தி சொல்ல அன்பான அண்ணன் இல்லை. இப்பொழுது உறவினர் யாரும் அவள் வீடு தேடி வருவதில்லை. அன்பு மிக்க தனது அண்ணனை எண்ணி தங்கை ,அழுது புலம்புகிறாள்: