பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/506

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

520

    தமிழர் நாட்டுப் பாடல்கள்

   காலைப் பூசை செய்யாத 
   காய்க்காத காயானேன்!
  சேகரித்தவர்:           இடம்: S.M. கார்க்கி              சிவகிரி,
                        நெல்லை
           மாரடிப்பு
    ஒப்பாரி பாடும் முன்னால் பெண்கள் மாரடித்துக் கொண்டு ஒரு பாட்டுப் பாடுவார்கள். தகப்பன் இறந்து போனால் அவருடைய பெண்மக்கள் மாரடிப்பார்கள். அவரைவிட வயதில் குறைந்தவர்களும் மாரடித்துக் கொண்டு கூடச் சேர்ந்து பாடுவார்கள். அப்பாட்டில் சவ அடக்கச் சடங்குகள் பலவும் வரிசையாகக் கூறப்படும். இச் சடங்குகள் சாதிக்குச் சாதி மாறுபடும். அவை சாதி உயர்வு தாழ்வுகள் ப்ற்றி வெவ்வேறாயிருக்கும். இவற்றில் ஒரு சாதிக்குரிய சடங்கைப் பிற சாதியினர் செய்தால் கலகம் உண்டாகி விடும். திருமலை நாயக்கர் காலத்தில் பள்ளருக்கும் பறையருக்கும், சாவின்போது எத்தனை குடைகள் பிடிக்க வேண்டுமென்பதில் சச்சரவுண்டாகிப் பெருங்கலகம் தோன்றியது. நாயக்கர் தலையிட்டு சமரசம் செய்து வைத்து சாசனம் பிறப்பித்தார். அரசாங்கம் இவ்வேறுபாடுகளைப் பாதுகாத்து நிலை நிறுத்தியது. பந்தல் போடுவது, நடைபாதையில் துணி விரிப்பது, கருமம் செய்பவனுக்குக் குடை பிடிப்பது, சங்கம் ஊதுவது, இரட்டை மேளம் வாசிப்பது இவை போன்ற வழக்கங்கள் சாதிக்குச் சாதி சமூக வழக்கங்களால் அறுதியிடப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றிய செய்திகள் பல நாயக்கர் கால சாசனங்களில் காணப்படுகின்றன.


      மாரடிப் பாட்டு -1


    ஐயாவே ஐயாவே 
    பாலு கொண்டு வந்தியளோ 
    பாதரவம் தீத்தியனோ 
    மோரு கொண்டு வந்தியளே 
    மோட்ச கதி பெத்தியளோ 
    மூத்த மகன் கண்ணருகே 
    மோட்ச கதி பெத்தியளோ 
    இளைய மகன் கண்ணருகே 
    எமலோகம் சேர்ந்தியளோ