பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

530

    தமிழர் நாட்டுப் பாடல்கள்

   கத்திரிக்காய் எங்களுக்கு
   கயிலாசம் உங்களுக்கு
   பூசணிக்காய் எங்களுக்கு
   பூலோகம் உங்களுக்கு
   வாழைக்காய் எங்களுக்கு
   வைகுந்தம் உங்களுக்கு
   இடிச்சமா எங்களுக்கு
   இடுகாடு உங்களுக்கு
   பொரிச்சமா எங்களுக்கு
   பூலோகம் உங்களுக்கு
   சோளப்பொரி எங்களுக்கு
   சொர்க்கலோகம் உங்களுக்கு
   எள்ளுக்காய் எங்களுக்கு
   இடுகாடு உங்களுக்கு.


   குறிப்பு: இந்தப் பாட்டில் கேலியும், கிண்டலும், மகிழ்ச்சியும் கலந்திருப்பதைப் பார்க்கிறோம். கத்திரிக்காய் அதாவது பொங்கி வைத்த சோறு கறியெல்லாம் இருப்பவர்களுக்கு.


    சேகரித்தவர்:             இடம்: S.S. போத்தையா      விளாத்திகுளம்,
                 நெல்லை மாவட்டம்.


     தருமரைத் தேடுகிறார்கள்


     அவர் ஊரில் நியாயம் தீர்த்து வைக்கும் அம்பலக்காரர். இரவு பகலாக ஊர் வழக்குகளை எல்லாம் தீர்த்து வைப்பார். ஊரில் எல்லோரும் அவரை தருமர் என்று அழைப்பார்கள். போலிசார் அவருடைய உதவியை எப்பொழுதும் நாடுவார்கள். அவர் இறந்துவிட்டபொழுது அவருடைய மகள் ஒப்பாரி சொல்லி வருந்துகிறாள்.


   கவனருட கச்சேரியாம் 
   கவனருட கச்சேரியிலே 
   கெடி ராந்தா நின்னெரியும் 
   கெடி ராந்தா நின்னெரிய 
   சீமையெல்லாம் தேடுதாக 
   தண்ணியிலே மங்களமாம் 
   தர்மரோட கச்சேரியிலே 
   தர்மரோட கச்சேரியிலே