பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/517

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

531 ஒப்பாரி

தனிராந்த நிண்ணெரிய தனிராந்த நிண்ணெரிய தாமரையே தேடுதாக தங்கமிதியடியாம் தர்மரோட கச்சேரியாம் தருமருக்கு வாய்த்த பிள்ளை தம்பி சிறுசுகளாம் பொன்னு மிதியடியாம் போலீசார் கச்சேரியாம் போலீசார் கையமத்த புள்ளை சிறுசய்யா

வட்டார வழக்கு: கவனர்-கவர்னர், கெடிராந்தா-விடிய விடிய எரியும் மண்ணெண்ணெய் விளக்கு; மங்களா-பங்களா; கையமத்த-விடை கூற.

சேகரித்தவர்: S.M. கார்க்கி இடம்: சிவகிரி, நெல்லை.

கும்மினியாள் அழுது வந்தாள்

ஒப்பாரிகளில், மனைவி கணவனோடு வாழ்ந்த பெரு மையை நினைத்தும், அது அழிந்தது குறித்து வருந்தியும் பாடுவாள். கணவனை ராமன் என்றும், தன்னை சீதை என்றும், கணவனை அருச்சுனன் என்றும், தன்னை அல்லி என்றும் பெருமை பாராட்டிப் பேசுவது மரபு. தமிழ் நாட்டில் நாயக்க மன்னர் ஆட்சி ஒழித்து, நவாப் ஆட்சி சிறிது காலம் நடைபெற்றது. அதன் பின்னர் கும்பினியார் ஆட்சி தோன்றியது. அரசர் பெயரையே கேள்விப்பட்டிருந்த பாமர மக்கள் கும்பினியார் என்றால், அயல் நாட்டிலிருந்து தம்மை ஆளும் ஒரு அரசர் என்றே எண்ணினார்கள். இப்பெண் கும்பினியார் என்ற அரசனுக்கு ஒரு மனைவியைக் கற்பனை செய்கிறாள். தனக்குத் தெரிந்த ஜமீன்தார்களை எல்லாம் ஜெயித்து ஆட்சியைக் கைப்பற்றிய கும்பினியாரின் மனைவி மிகப் பெரிய ராணியாக இருக்க வேண்டுமல்லவா? ஆகவே தன்னை கும்பிணியாள் என்றே சொல்லிக் கொள்கிறாள். கும்பினியாள் என்றால் சக்கரவர்த்தினி என்று பொருள். சக்கரவர்த்தினி போலச் சிறப்பாக வாழ்ந்த அவளுடைய பெருமை எல்லாம் அவள் கணவன்