பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/523

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஒப்பாரி 537


நாழி இழந்திருச்சே

நடுக் கிணறு ஏலமாச்சே

கூசா இழந்திருச்சே-நம்ப

கொல்லைப் புஞ் செய் ஏலமாச்சே


உதவியவர்:

S.M. கார்க்கி


இடம்:

சிவகிரி,

நெல்லை.


     வாடும் மல்லிகைப் பூ!
  அவள் கணவனைப் பறிகொடுத்து வாடுகிறாள். அவள் வளர்த்த மல்லிகையும், செண்டு மல்லியும் அவள் துயரம் கண்டு வாடுகின்றன.

மானம் கடன் வாங்கி

மல்லிகை நாத்து விட்டேன்

மரமேறிப் பாருங்களேன்

மங்கை புலம்புவதை

மல்லிகைப் பூ வாடுவதை

சேரக் கடன் வாங்கி

செண்டுமல்லி நாத்து விட்டேன்

செவரேறிப் பாருங்களே

சீதை புலம் புவதை

செண்டு மல்லி வாடுவதை


வட்டார வழக்கு: மானம்-பெரும் பணம்; சேரமிகுதியாக, செவர்-சுவர் (பேச்சு).

உதவியவர்: கவிஞர் சடையப்பன்


இடம்: அரூர், தருமபுரி.


    மஞ்சனில்லாப் பாவி

பல ஒப்பாரிகளில் மைந்தனில்லாக் குறைக்காகப் பெண்கள் வருந்தி அழுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் அதற்கு வினையையும் தெய்வத்தையும் காரணம் காட்டுவார்கள். இங்கே இப்பெண் கண்காணாத சக்திகளின் மீது பழி போடாமல், உண்மையான சமூக விஞ்ஞானக் காரணத்தைக் கூறுகிறாள்.

மல்லிகைப் பூ மெத்தையிலே

மாதங்கூடத் தூங்கலையே