பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

539 ஒப்பாரி

வரிசையிட ஒருவரில்லை மாசம் ஒரு நாளு மாரியம்மன் திருநாளு மாரியம்மன் திருநாளில் மாலையிட யாருமில்லை மணைப்போட ஒருவரில்லை

சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன் இடம்; அரூர், தருமபுரி மாவட்டம்.

எமகிரி சேர்த்துவிட்டேன்

தாய் இறந்துவிட்டதாகச் சாவோலை வந்தது. அவள் யாரையும் அழைத்துச் செல்லாமல் அவசரமாகச் சென்று எமகிரிக்கு அனுப்பி வைத்து விட்டாள். தாய் இறந்தால் குளிப்பாட்டி அனுப்ப வேண்டிய கடமை மகளுடையது.

கல்லெளச்ச திண்ணையிலே பொன்னெளச்ச பாய் போட்டு-நான் சாஞ்சு படுக்கும் போது எங்கமூட்டு சாவோலை வந்ததுங்கோ யாரூட்டு ஓலையிண்ணும் அசந்தன் வெகுநேரம் வாசலிலே இருந்த வங்க வாசித்துச் சொன்னாங்க.

அழுத பிள்ளை எடுக்காம அவுந்த மயிர் முடிக்காம ஏறினேன் பொட்டி வண்டி இறங்கினேன் திண்டிவனம் என்னைப்பெத்த ஆயாளை எடுத்துக் குளிப்பாட்டி எமகிரி சேர்த்து விட்டேன்.

வட்டார வழக்கு: கல்லெளச்ச-கல்லிழைத்த: பொன்னெளச்ச-பொன்னிழைத்த, எங்கமூட்டு -எங்கப்பன் வீட்டு; யாரூட்டு-யார் வீட்டு (பேச்சு); அசந்தன்-அயர்ந்தேன்.

சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன் இடம்: சேலம் மாவட்டம்.