பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாரி 541

கொண்டார். அவன் இல்லாமலேயே இருந்துவிட்டால் வருத்தம் அவ்வளவு தோன்றாது. கிடைத்து, சிறிது காலம் அனுபவித்த பிறகு இழப்பதென்றால் தாய்க்குத் தாங்க முடியாத வருத்தம் ஏற்படத்தானே செய்யும்?

படி ஏறிப் பூப்பறிச்சு பந்தறிய மாலை கட்டி பரமனார் கோயிலுக்கு பாலு படி கொண்டு போனேன் பாலு படி தவறாச்சு-என் பக்கம் மனுவுமில்லை பரமனார் பக்கமில்லை செடியேறிப் பூப்பறிச்சு செண்டறிய மாலை கட்டி சிவனார் கோவிலுக்கு சிவபடியும் கொண்டு போனேன் சிவபடியும் தவறாச்சு சேர்த்த மனுவுமில்லை சிவனார் பக்கமில்லை.

சேகரித்தவர்: S.S. போத்தையா இடம்: விளாத்திகுளம், நெல்லை மாவட்டம்.

பூட்டிக் கிடக்குதுங்கோ

தந்தை இறந்த சில ஆண்டுகளில் தாயும் இறந்து போனாள். தாயின் காலத்திற்குப் பிறகு அவ்வீட்டில் வாழ ஆண் பிள்ளைகள் இல்லை. வருங்காலத்தில் இவ்வீட்டைத் தேடிப்போனால் அது பூட்டிக் கிடக்குமே என்றெண்ணி வருத்தத்தோடு ஒப்பாரி சொல்லுகிறாள்.

தங்கச் சரகு கட்டி தங்கச் சம்பா நெல்லெடுத்து தாய் வீடு போலா மிண்ணும் தங்கமலை தாண்டி தவணக் கொடி ஆறு தாண்டி தடம்புடிச்சி போய் பார்த்தேன் சாத்தி கெடுக்குதுங்கோ சஞ்சல மாகுதுங்கோ

A519-35