பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/533

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாாி

547




காலன் பெருமாளும்
கட்டெடுத்து சொன்னாக
எள்ளரைச்சு கோலமிட்டு
எமனையே வரவழைச்சி
எமன் பெருமாளும்
ஏடெடுத்தும் சொன்னாக
பொன் எடுத்து கோலமிட்டு
பொழுது வரவழைச்சு
பொழுதும் பெருமாளும்
போட்டெழுத்துன்னா சொன்னாக
தங்க மலையேறி
சாதகங்கள் பார்க்கையிலே
தங்கமலை நாதாக்கள்
தகுந்தெழுத்துன்னும் சொன்னாக
ஆத்துக்கும் அந்தப்புறம்
அழகான கல்லறையே
கல்லறை மேடையிலே
கண்ணுறக்கம் வந்ததென்ன?
கரிஞ்ச நிழல் பாத்து
தாவரம் பத்தியிலே--உனக்கு
குளுந்த நிழல் பாத்து
கூட இருக்கத் தேடுதனே
ஒத்த மரமானேன்
ஒரு மரமே காலாற
பக்கமரம் இல்லாமே
பதவி குலைஞ்சேனே

உதவியவர்:

இடம்:

எஸ்.எம். கார்க்கி

சிவகிரி, நெல்லை மாவட்டம்.

தங்க லைட்டுமில்லை

மின் விளக்குப் போல ஒளிமிகுந்த அவளுடைய வாழ்க்கை யில் இன்று இருள் கப்பிவிட்டது. காரணம் கணவன் மறைந்துவிட்டான்.


தங்க வள வளைச்சு
தாவரம் தொட்டி பண்ணி
தாவர தொட்டியிலே--நான்
தங்காளும் படுத்திருந்தால்-எனக்குத்