பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 தமிழர் நாட்டுப் பாடல்கள் பாசிப் பயிறு எடுத்து பத்தினியாள் கையெடுத்து உழுந்தம் பயறெடுத்து உத்தமியாள் கையெடுத்து சேகரித்தவர். இடம்: குமாரி P. சொரணம் சிவகிரி, நெல்லை மாவட்டம். மாரியம்மன் பாட்டு -3 தேசமாளும் முத்தம்மா முத்தாரம்மன் தென் பாண்டி நாட்டில் உழவர் பெரு மக்களால் வணங்கப்படும் தெய்வம். சில சிற்றுர்களில் இவருக்குப் பெரிய கோவிலும், தேரும் திருவிழாவும் உண்டு. இவள் பிறப்பு முத்தாரம்மன் வில்லுப்பாட்டில் சொல்லப்படுகிறது. ஏழ்கடலுக்கும் அப்பாலுள்ள, மணி நாகபுற்றிலுள்ள நாகம் மூன்று முட்டைகளிட்டது. பார்வதியின் அருளால் முட்டைகளிலிருந்து மூன்று பெண்கள் தோன்றினர். அவர்கள் பிரம்மராக்கு சக்தி, சின்னமுத்தார், பெரிய முத்தார் என்பவர்கள். அவர்கள் மூவரும் தவம் செய்து சக்தி முனியின் அருளால் குழந்தையைப் பெற்றார்கள். அனைவரையும் அழைத்துக் கொண்டுபோய் கயிலையில் சிவபெருமானை வணங்கினர். நாட்டிலுள்ள கொடுமைகளை அழிப்பதற்கு, மூவரும் கொடும் வியாதிகளை வரமாகக் கேட்டார்கள். பிரம்மராக்கு-சக்திக்குக் குணமாகாத பல நோய்களையும், சின்ன முத்தாருக்கும், பெரிய முத்தாருக்கும், சின்னம்மை, பெரியம்மை என்ற வியாதிகளையும் கயிலையங் கடவுள் வரமாக அளித்தார். இவ்வாறு கொடிய நோய்களை உண்டாக்கும் சக்திபெற்ற மூன்று சகோதரிகளும் தமிழ் நாட்டிலே வந்து குடியேறி, கொடியவர்களைத் தண்டிக்கப் பரமசிவனுடைய வரங்களைப் பயன்படுத்தி வருகிறார்களாம். இப்பொழுது பிரம்மராக்கு சக்திக்கு சிற்சில ஊர்களிலேயே கோயில்கள் உள்ளன. முத்தாரம்மன் தென்பாண்டி நாட்டிலுள்ள ஒவ்வொரு ஊரிலும் கோயில் கொண்டிருக்கிறாள். இவள் தீயவர்களைக் கொடுநோயால் தண்டிப்பாள். நல்லவர்களை வாழ்த்தி வரம் கொடுப்பாள். பிற்காலத்தில் கன்னடியர் ஆந்திரர் படையெடுப்புகளின் போது தமிழ்நாடு புகுந்த மாரியம்மன் சிற்சில ஊர்களில் இவளோடு ஐக்கியமாகி விட்டாள். இவள் பார்வையால்