பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

554

தமிழா் நாட்டுப் பாடல்கள்




கணக்கு பிள்ளை தங்கச்சி-நான்
கை ஏந்தி பொய்யானேன்
மல்லாக் காய் பூ பூக்கும்
மலையோரம் பிஞ் செறங்கும்
மணியக்காரன் தங்கச்சி-நான்
மடி ஏந்திப் பொய்யானேன்

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

அழகு முகம் தென்படலை

மகள் வருவதற்கு முன் தகப்பனின் சடலத்தைச் சுற்றத்தார் சுட்டெரித்து விட்டார்கள். இறந்துபோன தந்தையின் சடலத்தையா வது காணலாம் என்று ஓடிவந்த மகள் தான் வருமுன்பாகவே தந்தையின் சடலத்தைச் சுட்டெரித்த செய்தி கேட்டு "நான் எங்கு தேடியும் உங்கள் முகம் தென்படவில்லை, இனி எப்படி உங்களைக் காண்பேன்?" என்று அரற்றி அழுகிறாள்.

சுடலை புரமெல்லாம்
சோதிக்க நாங்க வந்தோம்
சுடலை தென்படுது-உங்க
சோர்ந்த முகம் தென்படலை
ஆறு புர மெல்லாம்
ஆராஞ்சு நாங்க வந்தோம்
ஆறு தென்படுது-உங்க
அழகு முகம் தென் படல

வட்டார வழக்கு: சுடலை-சுடுகாடு; ஆராஞ்சிஆராய்ந்து.

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

சக்கிலிப்பட்டி,

தருமபுரி மாவட்டம்.


கருமம் செய்ய பிள்ளை இல்லை

குழந்தைப் பேற்றை விரும்பிய ஒரு பெண் பூஜை பல செய்கிறாள். குழந்தை பிறக்கவில்லை. அவள் பூஜை செய்தும் குழந்தை பிறக்காமல் இருந்ததை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவள் கணவனும் இறந்து