பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாாி

559




மண் குறிஞ்சி மேலிருந்து
மங்கை நியாயம் பேசினாங்க
மாலை பொழுதாச்சி
மங்கை நியாயம் தீரவில்லை

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

சக்கிலிப்பட்டி,

தருமபுரி மாவட்டம்.

நொந்தவள்

சில மிருகங்கள் மனிதர்களின் துன்பத்தில் பங்கு கொள்ளும். தன்னுடன் மிகவும் அன்புடன் பழகும் மனிதர்கள் இல்லையென் றால் சில மிருகங்கள் உணவுகூட உண்ணாது. ஒரு பெண் விதவையாகிவிட்டாள். கணவன் பிரிவினால் அவள் மிகவும் மனம் நொந்துபோய் இருக்கிறாள். ஆனால் அவளுக்கு ஆறுதல் சொல்வார் இல்லை. தான் வளர்க்கும் காராம் பசு, அதன் கன்று, எருமை முதலியன கூட தன்னைக் கண்டு இரங்கும். தன் நிலைமை கண்டு வேதனைபட்டுத் தாங்கள் உணவு கொள்ள மனமின்றி இருக்கும். ஆனால் தன்னோடு பழகிய மனிதர்களில் ஆறுதல் சொல்லித் தேற்றுவார் யாருமில்லையே! இது என்ன கொடுமை என்று கண்ணிர் விட்டழுகிறாள்.

காராம் பசுவு கிட்ட
கன்னி குறை சொல்லியழுதால்
காராம் பசு கூட
கடிச்ச புல்லைக் கீழே போடும்.
ஈணாத எருமைக் கிட்ட
எங்குறையை சொல்லியழுதா
ஈணாத எருமை கூட
எடுத்த புல்லைக் கீழே போடும்.
பால் குடிக்கும் கண்னு கிட்ட
பாவி குறை சொல்லியழுதா
பால் குடிக்கும் கண்ணு கூட
பாவி குறை கேட்டழுகும்.

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அருா்,

தருமபுரி மாவட்டம்.