பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

560

தமிழா் நாட்டுப் பாடல்கள்



நெஞ்சுக்குள்ள ஆத்தரனே

தன் துன்பத்தைத் தான்தான் அனுபவிக்க வேண்டும் என்று அவள் எண்ணி தன் மனத்திற்குள்ளேயே அழுது கொள்ளுகிறாள். அவள் துன்பத்தை அவள் அனுபவித்து வழக்கமாகிவிட்டது. மற்றவர் கேட்டு அவர்களும் மனதிற்கு வருத்தப்பட வேண்டாம். அவள் வருத்தம் தான் என்ன? குழந்தைச் செல்வத்தை அடையாதவள் என்ற ஓர் எண்ணமே போதுமே! அத்தோடு இனி குழந்தைப்பேறு அடையாளம் என்ற நம்பிக்கைக்கு இடமில்லாமல் கணவனையும் இழந்தவளாகவும் ஆகி விடுகிறாள். துக்கத்திற்குக் கேட்க வேண்டுமா?

நெருஞ்சிப் பூ பூக்கும்
நெஞ்சுக்குள்ளே காய் காய்க்கும்-என்
நெஞ்சை விட்டு சொன்னாலே-உங்க
நெறங்கொலைஞ்சி போகு மின்னு- என்
நெஞ்சுக்குள்ளே ஆத்தரனே
மாதளங்கா பூ பூக்கும்
மனசுக்குள்ளே காய் காய்க்கும்-என்
மனசை விட்டு சொன்னாலே-உங்க
மனங்கலைஞ்சி போகு மின்னு-என்
மனசிக்குள்ளே ஆத்தரனே

வட்டார வழக்கு: ஆத்தரனே-ஆற்றுகிறேனே.

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

சக்கிலிப்பட்டி,

தருமபுரி மாவட்டம்.

இரும்புலக்கை தூக்கலாச்சே

கணவன் உயிரோடிருந்தான். அவனுக்குப் பொங்கிப் போட்டு நிம்மதியாக வீட்டில் நிழலில் சுகமாக இருந்தாள். என்னாலுமே காலம் ஒன்றுபோல் செல்லாதல்லவா? அவளு டைய அந்த நிம்மதியான வாழ்க்கைக்கும் தடங்கல் ஏற்பட்டது. உழைத்து சம்பாதித்துப் போட்ட கணவன் இறந்தான். குழந்தை குட்டியுமில்லை. பிறந்த வீட்டு மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டு அங்கே சென்று இருக்கவும் வழியில்லை. வயிற்றுப் பாட்டுக்கு என்ன செய்வது? அவள் கூலி வேலை செய்யக் கிளம்பினாள். கூலியின் விஷயம் நமக்கு தெரியாதா? ஈ விழுந்த கூழுக்காக இரும்புலக்கை தூக்கி எள்ளுக் குத்துகிறாள்.