பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/549

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாாி

563




முத்தப்பெருக்கு வேனோ-நான்
மூடு பனி ஆத்து வேனோ?
பவள மலை மேலே
பாடு பனி பேயுதுங்க
பவளத்தைப் பெருக்குவேனோ-நான்
பாடு பனி ஆத்துவேனோ?

உதவியவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

சேலம் மாவட்டம்.

பூமாலை

அவளுக்குத் திருமணம் நடந்து விட்டது. ஆனால் அவள் விபரம் தெரிந்த பெண்ணாகிய பொழுதல்ல, ஐந்து வயதில்: திருமணத்தையும் ஒரு விளையாட்டு என்று கருதும் பருவத்தில் நடந்து விட்டது. நல்ல கணவனாக இருந்தானென்றால் கவலை இல்லை. ஆனால் அவனோ அவளை மோசம் செய்து விட்டுப் போய் விட்டான். தன்னை ஏன் அவ்வளவு இளவயதிலேயே திருமணம் என்ற பந்தத்தில் சிக்க வைத்து பின் அவனையும் இழந்து துன்பத்தில் ஆழ்த்த வேண்டும்? தந்தையே மகளுக்கு கஷ்டத்தை கொடுக்கலாமா?

கொளத்தருகே வாள் நட்டு
கொலவாள நூலெடுத்து
கொஞ்சத்திலே கோத்த மாலை
குணமில்லா பூ மாலை
ஆத்தருகே வாள நட்டு
அடிவாள நூலெடுத்து
அஞ்சிலே கோத்த மாலே
அழகில்லா பூ மாலை

சேகாித்தவா்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூா்,

தருமபுாி மாவட்டம்.


கை சோர்ந்து நிக்கறனே

அவளும் ஒரு காலத்தில் ஒரு குறையுமில்லாமல் கணவனுடன் வாழ்க்கை நடத்தினாள். செல்வச் செழிப்புடன் விளங்கியது அவள் குடும்பம். ஆனால் போகிற காலத்தில் பூட்டி வைத்தாலும் போய் விடும் தன்மையுள்ளதல்லவா செல்வம்? "இன்று ஒருவனி