பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

568

தமிழா் நாட்டுப் பாடல்கள்




நெல்லாலே நெல் லெடுப்பேன்
சிறு சம்பா நெல்லெடுப்பேன்
அண்ணடுச்ச நெல்லுயிண்ணா
அவிச லேறிப் போகுமிண்ணு
நேத்தடிச்ச நெல்லுயிண்ணா
நெஞ்சடச்சிப் போகு மிண்ணு
தானா பழுத்த நெல்லே
தருவிச்சேன் கப்பலிலே
உரலுலே குத்துனா
ஒண்னு ரண்டா போகுமிண்ணு
நெகத் தாலே அரிசி பண்ணி
வெங்கலத்தில் தண்ணி யெடுத்தா
வெங்காரம் அடிக்கு மிண்ணு
புதுப்பானை தண்ணி யெடுத்தா
பொகை யேறிப் போகுமிண்ணு
ஆத்துத் தண்ணி கொண்டு வந்து
ஆக்கினேன் சாதங்கறி
நாகூரு குச் சொடிச்சி
நல்ல வாயி பல் தொலக்கி
தீத்தமலை தீத்தங் கொண்டு
திரு வாயெ கொப்பளிச்சி
பொன்னு கரண்டியிலே
பொறிச்சேன் நூறு வகை
தங்கக் கரண்டி
தாளிச்சேன் நூறு வகை
உண் ணாெரு கரண்டியிலே
ஊறுகா நூறு வகை
வடக்க ரண்டு ஆளனுப்பி
வாளயெலை கொண்டு வந்தேன்
தெற்கே ரெண்டு ஆளனுப்பி
தெய்யலையும் கொண்டு வந்தேன்
எலமேல எலை பதிச்சு
எள நீரை தாந் தெளிச்சு
சோறு யிண்ணா கொஞ்சம் வைப்பேன்
சுத்து கறி ரம்ப வப்பேன்
சாத மிண்ணா கொஞ்ச வப்பேன்
சமைச்ச கறி ரம்ப வைப்பேன்
சாப்பிட்டுப் பசியாறி