பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/558

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

572

தமிழர் நாட்டுப் பாடல்கள்




வீராணத்துப் பெண்களெல்லாம்
அங்கவரும்
வெள்ளாளச்சி யாருயிண்ணர்
வெள்ளாளச்சி யில்லையம்மா-நான்
வேடுவர்க்குத் தங்கை விண்ணேன்

குறிப்பு: காராளச்சி-வெள்ளாளப் பிள்ளைகளில் கார்காத்தார் என்பது ஒரு பிரிவு.

வட்டார வழக்கு: காஞ்சிபொரம்-காஞ்சீபுரம்.

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

கொடுமை செய்யும் அண்ணி

அவள் புகுந்த வீடு செழுமையுள்ளது. அவள் பட்டுடுத்தி நகைகளை யணிந்து கணவன் உயிரோடிருக்கும் காலத்தில் பிறந்த வீடு போனால், அவளுடைய அண்ணி அவளைப் பார்த்துப் பொறாமைப் படுவாள். அவள் கணவனை பிரிந்த பின்பு அண்ணனிடம் தங்குவதற்குப் போகிறாள். வாழும் காலத்திலேயே அவளைப் பார்த்து வயிற்றெரிச்சல்பட்ட அண்ணி அவள் வெள்ளையுடுத்தும் விதவையான பின்பு சும்மாயிருப்பாளா? உயிர் போன்ற கணவனே போய்விட்ட பிறகு அவளுக்கு அற்ப நகைகள் எதற்கு? பட்டுதான் எதற்கு? கண்ணிர் உகுத்தவாறு அவைகளையும் அண்ணனிடம் கொடுத்து விடுகிறாள்.

பட்டை உடுத்தி கிட்டு
பவுனு காசைப் பூட்டிகிட்டு-நான் பொறந்த
பட்டணத்தெ போனாலே
பட்டணத்தில் பேஞ்ச மழை-என்
பட்டை நனைச்சிடுச்சி
பவுனு காசு உருகிடுச்சி
பெரியண்ணன் பொண்டாட்டி-என்
பட்டை கழட்டு மிண்ணாள்
பவுனு காசை உருவுமிண்னாள்
பட்டையும் கழட்டி விட்டேன்
பவுனு காசை உருவி விட்டேன்
அண்ணனாண்ட