பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/563

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாாி

577



என்பதை எண்ணி அழுகிறாள். அவர் இருந்த தன் பிறந்த வீட்டை, தருமரோட மண்டபம் என்றும், ஆயிரங்கால் மண்டபம் என்றும், தந்தையைத் தருமர், அர்ச்சுனர், புண்ணியர் என்று புகழ்ந்து கூறுகிறாள்.

தங்கக் கட்டு தாம்பாளம்
தருமரோட மண்டபம்-நீங்க
தருமரும் போயி சேர-நீ பெத்த
தனியாருக்குத் தாங்க முடியல்லையே
பொன்னு கட்டு தாம்பாளம்
புண்ணியரோட மண்டபம்-என்ன பெத்த
புண்ணியரே நீ போக-எனக்கு
பொறுக்க முடியலியே
என்னை அண்டாத யிண்ணிங்களே
ஆயிரங்கால் மண்டபத்தே-என்ன பெத்த
அர்ஜுனனும் நீ போக
அண்ட முடியலியே

வட்டார வழக்கு அண்டாத-அண்டாதே, நெருங்காதே; இண்ணிங்களே-என்றீர்களே.

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்

எமலோகம் போனதென்ன?

தன் பெண்ணை மிகவும் அன்புடன் பேணி வளர்த்தார் தந்தை. தன்னுடன் வெளியில் அழைத்துச் செல்வார். அவள் முகம் வாடுவதற்குச் சம்மதிக்கமாட்டார். காற்று சற்று பலமாக அடித்தால்கூட அதனால் மகளுக்கு உடல் தலம் குறைந்து விடக் கூடாதென்று காற்றடிக்காமல் தான் மகளை மறைத்து நின்று கொள்வார். அவ்வளவு அன்பான தந்தை இறந்தவுடன் மகள் உணர்ச்சி மேலிட்டுத் தன்னை அவர் அன்போடு பாதுகாத்து வளர்த்ததை வாய்விட்டுச் சொல்லி பொருமி அழுகிறாள்.

பத்தடிக் கொட்டாசி
பவளக்கால் மேல் துலம்
பசுங் காத்தடிக்கி திண்ணும்