பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/564

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

578

தமிழா் நாட்டுப் பாடல்கள்




என்ன பெத்த எப்பா
பக்கமாக நிறுத்தனையே
பத்தடுக்கு மெத்தை மேலே
படிக்கிறதா எண்ணியிருந்தேன்-நீங்க
படிக்க முடியாம
பரலோகம் போன தென்ன
எட்டடுக்கு மெத்தை யிலே
எழுதறதா எண்ணியிருந்தேன்
எழுத முடியாம-நீங்க
எமலோகம் போன தென்ன

வட்டார வழக்கு: கொட்டாயி-கொட்டகை.

உதவியவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

இரவலாச்சு

அவளுக்கு மணமானது. மிக்க மகிழ்ச்சியுடன் கணவனுடன் வாழ்க்கை நடத்துகிறாள். இனி புருஷன் வீடு தான் சொந்தம். பிறந்த வீடு சொந்தமில்லை என எண்ணி இறுமாந்திருந்தாள். ஆனால் புருஷன் காலமானவுடன் புருஷன் வீடும் இரவலாகப் போனதை எண்ணி எண்ணி புலம்புகிறாள்.

புருஷன் போனவுடன் அவருடைய சொந்தமும் போய் விட்டது.

தங்க செவரு வச்சி
தட்டோடு போத்தனிங்கோ
தட்டோடு சொந்த மில்லே-எனக்கு
தாவு எரவலாச்சு
பொன்னு செவரு வச்சி
புது ஒடு போத்தனிங்கோ
புது ஒடு சொந்தமில்லே-எனக்கு
பூமி எரவலாச்சு

வட்டார வழக்கு: போத்தனிங்கோ-போற்றினிர்கள்; தாவு (தெலுங்கு வார்த்தை)-இடம்.

சேகாித்தவா்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

சேலம் மாவட்டம்