பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தமிழர் நாட்டுப் பாடல்கள்


 தங்கம் விளையும் புஞ்சை தரிசாக் கிடக்குதடி.
காட்டை உழுது போட்டேன், கடலை போடப் பட்டம் பார்த்தேன்,
வந்த மழை போகுதில்ல வருணனே உனது செயல்.

வட்டார வழக்கு: போகுதில்ல-போகிறதல்லவா?

சேகரித்தவர். இடம்:


கார்க்கி

சிவகிரி வட்டாரம்,


நெல்லை மாவட்டம்.


கணபதி பூசை

வேண்டும் வரம் தரும் பிள்ளையாருக்குப் பூசை போடுவ தற்கு கிராமப்பெண்கள் தயார் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த ஆண்டில் நல்ல விளைச்சல், மங்கல வாழ்வு கொடுத்த பிள்ளையாருக்கு மங்களமாகப் பூசை போட அவர்கள் விரும்புகிறார்கள். நிலவு காயும் நேரத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து அவரைச் சுற்றிக் கும்மியடித்துப் பாடுகிறார்கள். கும்மியில் பிள்ளையார் பூசனைமுறை பற்றி பெண்கள் பாடுகிறார்கள்.

 ஒரு மிளகாயாம்-ஏலேலோ
கணபதியாம்
ஒரு ஆயிரம் திருவிளக்காம்-ஏலேலோ கணபதியாம்
திருவிளக்கு ஏலேலோ
கணபதியாம்
சிவனே என்று பொழுதெறங்க-ஏலேலோ கணபதியாம் பொழுதெறங்கும் வேளையிலே-ஏலேலோ கணபதியாம் பொங்கலுக்கு தண்ணி கொண்டு-ஏலேலோ கணபதியாம்
நீராடி நீர் குளித்து-ஏலேலோ
கணபதியாம்