பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 தமிழர் நாட்டுப் பாடல்கள் பொழுது. ஆற்றில் ஒடும்பொழுதோ அது எல்லோருக்கும் தெய்வமாக, தீண்டாமைத் தீயைக் கடக்கும் பாலமாக அமைந்து விடுகிறது. இதைப் பற்றி, காதலன் காதலிக்குக் கூறுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது. இதில் சித்தர்களின் ஜாதி மறுப்புக் கொள்கையுடன் ஒப்புமையுள்ள கருத்துக்கள் கூறப்படு வதைக்காணுகிறோம்.

கரை புரண்டு ஒடுதம்மா- அந்த காவிரியில் தண்ணி யெங்கும் நெளி நெளியா ஒடுதம்மா-அந்த நீல வண்ணத் தண்ணி யெல்லாம் சுழி சுழியா ஒடுதம்மா-அந்த சுத்தமான ஆத்துத் தண்ணி வெயிலடிக்கும் நேரமெல்லாம்-தண்ணி வெள்ளி போல மின்னுதடி. குடிதண்ணியும் குளி தண்ணியும் - கண்மணியே குடம் குடமா எடுப்பாங்களாம். தண்ணிக்கொரு தீட்டு மில்லை-கண்ணே அதைத் தடுக்க ஒரு நாதியில்லை பாப்பானுக்கு பச்சைத்தண்ணி-கண்மணியே பறையனுக்கும் பச்சைத்தண்ணி பட்டிக்காட்டில் பல சாதியாம்-கண்மணியே பறையன் முதல் பாப்டான் வரை தோட்டிமுதல்தொண்டமான்வரை-கண்மணியே தொழுந் தண்ணி பச்சைத்தண்ணி சண்டையிழுப்பதுவும்-கண்மணியே சாதிக்குள்ளே பச்சைத் தண்ணி தெய்வம்போல இருக்குந்தண்ணி-கண்மணியே திசையோடும் பச்சைத் தண்ணி உதவியவர்: இடம்:

 பாவாயி    செருக்கலைப்புதூர், 
 சேகரித்தவர்               சேலம்மாவட்டம்

கு. சின்னப்ப பாரதி

      தாது வருடப் பஞ்சம்

இந்தியாவில் பஞ்சம் என்கிறபோது எப்படி வங்கப் பஞ்சம், ராயல சீமாப் பஞ்சம் என்று சொல்கிறோமோ, அது போல, தாதுவருஷப் பஞ்சமென்பது நூற்றிருபது வருடங்கட்கு முன்பு