பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் நாட்டுப் பாடல்கள் தானியம் விதைத்தார்கள் தாதுவருஷத்தில் சீமையில் மழைமாரி பூச்சிய மாகவே தீய்ந்து பயிரெல்லாம் காய்ந்ததையா அரைக்கீரை சோளம் சிறு நெல்லு கம்புக்கு காரண மானதோர் புதன் சந்தையில்லை எட்டு வள்ளம் விற்று இரண்டு வள்ள மாகி துட்டமான பேர்களை மட்டடக்கி தட்டுப்படாதுதைத்து வள்ளத்தில் வைத்து கொட்டுப் பட்டாற் போல நிறுத்திற்றுமே


மாதமாம் தீபாவளிப் பண்டிகை வந்தது ஆன பேர் களிப்புடன் கொண்டாட முடியாமல் நோம்புகள் போச்சுதே, ஐயையோ கம்பு கார்த்திகை மாதத்தில் முக்கால் வள்ளம் கூட காணமுடியாமல் நாங்களும் தெம்பற்றோம் காட்டை புழுது பயிரிடும் காராளக் கவுண்டரெல்லாம் கவலேத்தமாட் டினை தேடியே கட்டை வண்டியில் கட்டி ஓடரோம் துரதேசமும் என்றாரே போயங்கு தவசம் பிடித்திடக் கையில் ஈயக் காசுக்கும் ஏதும் வழியில்லை பூமியைக் கொதவு வைத்தாலும் ஆங்கே பூரண காசுகள் தந்திடுவாரில்லை காப்புக் கடகமும் தோள் வெண்டயமும் காதுக் கொப்பு சில்லரை தாலியெல்லாம் விற்றாலும் கட்டாது அந்த ரூபாயெல்லாம் உமக்கு கவலை ஏத்த மாட்டு தீனிக்கே மட்டும் பத்தாததிற்கு பணம் வேண்டும் என்றுமே ஆடு மாடெல்லாம் விற்றெடுத்துக் கொண்டு ஆறுபேர் ஏழுபேர் நாம் சேர்ந்து நல்ல


கும்பகோணம் தஞ்சாவூர் போவது என்றால் புழுத்த சோளம் கம்பு புளிச்ச கீரை தின்ன புடிச்சுமே காலரா போகும் எட்டுப் பேரில் மூன்றுபேர் இரண்டுபேர் மூச்சுப் பிழைப்பார்கள் எல்லாம் சிவன் செயல் என்றிடு வாரெல்லாம் தினுக வேலைகள் எட்டுமே செய்குவார் சீமைகள் எங்கும் சுற்றித் திரிகுவார் சோளச்சோறு வாயுக்கு சேராதென்று சொன்ன