பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/90

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

38 தமிழர் நாட்டுப் பாடல்கள்

பட்டினியாய்ப் போன மாமன்-உனக்குப்

பரியங் கொண்டு வருவானோ?

வட்டார வழக்கு: வம்மிசம்-வம்சம், பெத்த-பெற்ற: வேவாரி-வியாபாரி, கொறம்-குறம், புடிச்சுக்கட்ட-பிடித்துக்கட்ட மானத்து மீன்-வானத்துமீன்; தொளைச்ச-துளைத்த, தொரைங்க-துரைகள், பரியம்-பரிசம்.

காசி அளப்பான் செட்டிமகன்-காசி பதம் என்ற குறிப்புரையில் காண்க.

துரைங்க கிளாமணியோ-துரைகளது கிளர்மணியோ என்று படிக்கவும்.

குறிப்பு: காசிபதம்-நாட்டுக் கோட்டைச் செட்டியர்களை நகரத்தார் என்று அழைப்பது வழக்கம். பண்டைக் காலத்தில் கூட்டாக வாணிபம் செய்யும் குழுக்களுக்கு நகரம் என்று பெயர் உள்ளன. இதனைச் சோழர் காலத்திய கல்வெட்டுக்களால் அறிகிறோம். வடநாட்டு நகரங்களால் காசியைத் தமிழர் அறிந்திருந்தனர். அவ்வளவு தொலைவிலுள்ள நகரத்திற்குச் சென்று இக் குழந்தை பெரியவனான பின்பு வியாபாரம் செய்வான் என்பது தாயின் கருத்து.


தேர்-அரசனைப் போல இவன் வருங்காலத்தில் தேரில் செல்லுவான்.

கொறத்தி கொறமாட-குறத்தி குறமாட குறம் குறத்தியர் பாடும் ஒரு கூத்தைக் குறிக்கும்.


கொறவர்-குரவர், வேதம் பாடுவோர்; பழங்காலப் பண்டிதர்கள் குரவர் என அழைக்கப் பட்டார்கள். அது பேச்சு வழக்காக வந்துள்ளது.

 "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழி இங்கு பயின்று வந்துள்ளது.

சேகரித்தவர்: சடையப்பன் இடம்:சேலம் மாவட்டம்.