பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாலாட்டு 91 ஜாதிக்காய் காய்க்கும் உன் தாய் மாமன் வாசலிலே கல்லில் எலுமிச்சை காய்க்கும் கதலிப் பழம் பழுக்கும் முல்லைப் பூ பூக்குதில்ல உன் தாய்மாமன் கொல்லையிலே தங்கக் குடை பிடிச்சு தாசிமாரை முன்ன விட்டு-உன்மாமன் தாசிக்கே விட்ட பணம்-ரெண்டு தங்க மடம் கட்டலாமே வெள்ளிக் குடை பிடிச்சு வேசிகளை முன்ன விட்டு-உன் மாமன் வேசிக்கே விட்ட பணம்-ரெண்டு வெள்ளி மடம் கட்டலாமே! முத்தளக்க நாழி முதலளக்க பொன்னாழி வச்சளக்கச் சொல்லி வரிசை யிட்டார் தாய் மாமன்.

    தெய்வமே காப்பு

வாருமையா கந்தா வரங் கொடுமே வேலவரே தீருமையா இவன் பிணியை திருச்செந்தூர் வேலவரே பச்சை நிறம் வள்ளி பவள நிறம் தெய்வானை சோதி நிறம் வேலவரு சொன்ன வரம் தந்தாரே! புங்கக் கட்டை வெட்டி-திரபதைக்கு புளியந் தணல் உண்டு பண்ணி; பூவே றங்கும் நேரமெல்லாம் திரெளபதை பொன்னிற மாய் வந்தாளே.