பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 தமிழர் நாட்டுப் பாடல்கள் யாரடித்தார்? ஆரடிச்சா நீ யழுத? அடிச்சாரச் சொல்லியழு பேரனடிச் சாரோ பிச்சிப்பூ கைனால? மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூ கைனால? மாமன் கைச் சிலம்போ மச்சி னமார் கைச்சிலம்போ?-நீ பேரனார் கொண்டைக்கு வாடா மருக் கொழுந்தோ?

     மகன் பெருமை

பட்ட மரம் பாலூறும், பாவல்காய் தேனூறும், உளித்தமரம் தான் தழையும், உத்தமியாள் வாசலிலே, வடக்கே ஒரு மூங்கில் வளருதில்ல கல்மூங்கில் வில்லுக்கு வில்லாகும் விஜயனுக்கு அம்பாகும் சொற் கேளா அர்ச்சுனர்க்கு சுண்டு வில்லு அம்பாகும் வடக்கே மழை பேஞ்சு வாசலெல்லாம் தண்ணி தண்ணி வந்தன. சயலிலே-நீ தங்கி வந்த தாமரையோ? வடக்கே மழை பேஞ்சு வார்ந்த மணல் ஓடிவர நடந்து போ பாலகனே-உன் நல்ல தடம் நான் பார்க்க வடக்கே ஒரு தாள் வர்ணலட்சம் பூப்பூக்கும் வாடை யடியாதோ வரிசை மகன் கண்ணயர