பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாலாட்டு 95 காரவீடோ கச்சேரியோ, கைநிறைந்த புத்தகமோ! பூ வில்லிபுத்தூர் கச்சேரியோ, செல்லத் துரைமகனோ! மானுறங்கும் மெத்தை, நீ மயில் உறங்கும் பஞ்சுமெத்தை தான் உறங்கா என் கண்ணே தவம் பெற்று வந்தவனோ! பட்டால தொட்டில், பவளக் கிலுகிலுப்பை முத்தாலா பரணம் முடியப் பிறந்தவனோ! மலையேறிப் பசுமேய மலைக்கெல்லாம் ஓசையிட பொழுதிறங்க வா பசுவே என் பொன்னு மகன் பால்குடிக்க மலை மேலே பசு மேயும் மலைமுடியும் ஓசை விடும் காலையிலே வா பசுவே கண்ணு மகன் பால் குடிக்க பொழுதுறங்க வா பசுவே என் பொன்னு மகன் பால் குடிக்க மாட்டுப் பால் போட்டால் மறுவழிஞ்சு போகுமின்னு: ஆட்டுப்பால் போட்டா அறிவழிஞ்சு போகுமின்னு: கலையம் கழுவி காராம் பசுக் கறந்து அடுப்பு மொழுவி அரும்பரும்பாக் கோலமிட்டு செம்பு வெளக்கி சிறு உமி பரப்பி தங்க வெற கொடிச்சு வெங்கலத்தால் பால் காச்சி பொன்னு சங்கெடுத்து போட்டாராம் உன் மாமன் இத்தனையும் செய்வதற்கு என்ன வெகுமதியோ