பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(முருகனைப் போன்ற தெய்வத்தைப் பண்டைக் கால நாகரிகத்தைப் படைத்த உலக மக்கள் பல நாடுகளிலும் படைத்துள்ளார்கள். தமிழ் நாட்டில் பழங்கால முருக வணக்கமும்,பரிபாடல் கால முருக வணக்கமும் வேறுபடுகின்றன. இதற்கிடைப்பட்ட காலத்தில் பண்பாட்டுக் கலப்பு ஏற்பட்டது. தமிழ் நாட்டு முருகக் கருத்தும், வடநாட்டில் இது போன்ற கருத்துக்களான சண்முக, குமர, ஸ்கந்தக் கருத்துக் களும் வளர்ச்சி பெற்ற போக்கை இலக்கியங்களி லிருந்து அறிந்து இரண்டு கருத்துக்களும் இணைத்த காலத்தில் அவற்றில் பக்குவ நிலைகளையும், இணைந்த விதத்தையும் நான் இக்கட்டுரையில் ஆராய்கிறேன். ஆர்.1 திற்காலத்தில் தமிழ் நாட்டில் வணங்கப்படும் முக்கிய கடவுளர்களுள் முருகன் ஒருவன். இவனுக்குப் பல பெயர் களும், உருவங்களும் உள்ளன. தமிழ் நாட்டில் சுப்பிர மணியன், முருகன், குமரன், ஆறுமுகன், வேலன். வேலாயுதம், வேலாயுதப் பெருமாள், பால சுப்பிரமணியம், கந்தன், தண்டாயுதபாணி, இளைய பிள்ளையார், சுவாமி நாதன் போன்ற பல பெயர்களோடு இக்கடவுள் வணங்கப் படுகிருர், திருத்தணிகை, பழனி, திருச்செந்துரர், குன்றக்குடி, திருப்பரன்குன்று, பெரும் பெயர்க்காண்டிகை போன்ற தலங்களில் இவன் விருப்புற்று வீற்றிருப்பதாகப் புராணக் கதைகள் கூறும். இவனைச் சிவகுமார்ன் என்று பிற்காலச் சைவ நூல்கள் கூறுகின்றன. மால்மருகன் என்று பிற்கால வைணவ