பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

を # - 종 § அவ்வளவுக்கு தான் கூறும் கதைகள் உண்மையெனப் பண்டை மனிதன் நம்பினுள். ே அவனுடைய பண்பாட்டு வளர்ச்சி நிலையில் இருக்கும் தற்கால இனக்குழு மக்களும் அவ்வாறே நம்புவதை மானிட வியலானர் கண்டுள்ளார்கள். ே புனே கதைகள் இத்தன்மையன என்பதை ೨,೩ கொண்ட பின் நாம் உலக படைப்புக் கதைகளில் மிகப் பண்டைக்காலக் கதைகளை ஆராய்ந்து அவற்றின் தோற்றத் திற்கு அடிப்ப்டையான சமுதாய அடித்தளத்தைக் கண்டு பிடித்து இரண்டையும் தொடர்பு படுத்திக்கான முயலுவோம். படைப்புக் கதைகளில் மிகப் பழமையானவை பாபிலோனிய-சுமேரியக் கதை, கிரேக்கக் கதைகள் இவை விரண்டுமாகும். அதற்கடுத்த பண்பாட்டுக் கட்டத்தில் யூதர்களது யெஹோவா-படைப்புக் கதையைக் கூறலாம். இதைப் பின்பற்றியே பைபிள் உலகப் படைப்பின் 'வரலாற்றைக் கூறுகிறது. ஏறக்குறைய அதே பண்பாட்டு வளர்ச்சி நிலையில் ரிக் வேதத்தில் காணப்படும் புருஷ சூக்தக் கதைகளைக் கூறலாம். பின்னர் விஷ்ணு புராணத்தில் கூறப்படும் நாராயணன் உலகப் படைப்புக் கதை தோன்றியது. கால நிர்ணயம் செய்ய முடியாத தந்திரீக நூல்களில் காணப்படும் படைப்புக் கருத்துக்கள் மிகப் பழமையானவை என்பதில் சந்தேகமில்லை. முதலில் பாபிலோனிய-சுமேரியப் படைப்புக் கதையைக் காண்போம். பாபிலோனியாவின் பண்டையத் தலைநகரான நினிலேயை ஜார்ஜ் ஸ்மித் 1873இல் அகழ்ந்து, ஆராய்ந்த பொழுது அஷஅர்பானிபால் (சுமார் 2000 B. C) என்ற அரசனின் காலத்தில் எழுதப்பட்ட சுட்டமண் ஒட்டுச் சாசனங்கள் கிடைத்தன. அவற்றில் படைப்புக் கதை எழுதப்பட்டுள்ளது. அச்சுட்டமண் ஓடுகளின் வாசகத்தை § 6