பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல். டபிள்யூ. கிங் என்ற ஆய்வாளர் படித்து படைப்பு பற்றிய ஏழு ஓடுகள்’ என்ற நூலை எழுதியுள்ளார். அந்நூலில் காணப்படும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டே நாம் இக்கதையின் போக்கைக் கூறுவோம். இப்பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தில் கடல் மட்டுமே இருந்தது. மேலே இருக்கும் வானத்திற்கும். கீழே இருக்கும் பூமிக்கும் பெயர்களிடப்படவில்லை. இவற்றின் தந்தை "அப்ஸ்") ; தாய் தியாமத்'. தரை இன்னும் உருவாக வில்லை. சேறும் இல்லே. அவற்றின் விதியும் நிர்ணயிக்கப் படவில்லை. கடலில் ஒர் அசைவு உண்டாயிற்று. பல தேவதைகள் நீரிலிருந்து வெளிவந்தன. லச்மூ தேவனும், லச்சாமூ’ தேவியும் வெளிவந்தனர். பின்னர் அன்ஷார் தேவனும், கிஷார் தேவியும் நீரினின்று எழுந்தனர். பின் 'அணு' என்னும் வானதேவன் உதித்தான். அவனுடைய மனைவி அளுது’. இயா இதன் பின் தோன்றின்ை. அவனே எல்லாத் தேவர்களிலும் அறிவு மிக்கவளுகவும் வலிமை மிக்கவனாகவும் இருந்தான். அவனுக்குச் சமமானவன் இல்லை. அவன் சமுத்திர ராஜனுகவும், பூமியின் மன்னனுகவும் இருந்தான். அவனுடைய தேவி டாம்கின பூமியின் தேவியாக இருந்தாள். இவ்வாறு தேவர்களும் தேவியர்களும் தோன்றி, வலிமையும் புகழும் பெற்ருர்கள். - - அப்ஸால்வும், தியாமத்தும் இருளடர்ந்த கடலில் குழப்பத்தினுள் வாழ்ந்தார்கள். தங்களின் வழித்தோன்றல் களான தேவர்கள் பிரபஞ்சத்தைத் தங்கள் ஆளுகைக்குட் படுத்தி குழப்பத்தில் ஒழுங்கை நிலை நாட்ட முயலுவதைக் கண்டு மூலப் பிதாவும், மூல மாதாவும் கவலையுற்றனர். தியாமத் தன் மீது அடித்துக்கொண்டு புயல்களைத் தோற்றுவித்தாள். அப்ஸ்அவும் அவனுடைய அமைச்சனும் தியாமத்தைப் போய்ப் பார்த்து அவளே வணங்கி விட்டு, தேவர்களுடைய § 7