பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவனுக ஏற்றுக்கொள்ளுகிறேன். மூன்றுலகிற்கும் நான் உன்னை அதிபதி யாக்குகிறேன்.” என்று கூறி அவனிடம் விதியின் கல்வெட்டையளித்தாள். இயா இதனையெல்லாம் அறிந்தான், தன் தந்தை அன்ஷாரிடம் சென்று 'நமது தாய் தியாமத் நம் மீது கோபங் கொண்டுள்ளாள். தேவர்களே அவள் தன்ளுேடு சேர்த்துக்கொண்டதோடு தான் படைத்த உயிர்களையும் நம் மீது ஏவிவிட்டிருக்கிருள். நீங்கள் அப்லைைவயும், மும்முவையும் அழித்து விட்டீர்கள். இப்பொழுது நம்மை யெல்லாம் அழிக்க கிங்குவை உலகத் தலைவனுக நியமித் திருக்கிருள், தியாமத்தை எதிர்க்க யாருமில்லை என்ருன்.” அவள் கோபத்தைத் தணித்து வரும்படி அவன் முதன் முதலில் 'அணு' வை அனுப்பினன், அனு தியாமத்தின் உலகிற்குப் போய் அவளைப் பார்க்க அஞ்சித் திரும்பி விட்டான். பின்னர் இயா சென்ருன். அவனும் அஞ்சித் திரும்பி விட்டான். பின் அன்ஷார் இயாவின் மகன் மெரோடாக்கை அழைத்து, 'என் அன்பிற்குரிய மகனே நீ போருக்குப் போ. உன்னே யாராலும் ஜெயிக்க முடியாது” என்ருன். 'தங்கள் கட்டளைப்படியே நடக்கிறேன். எந்த மனிதன் தங்களைப் போருக்கு அழைக்கிருன் 2 ” என்று அவன் கேட்டான். 'மனிதனல்ல தியாமத் என்னும் பெண் நம்மை டோருக்கு அழைக்கிருள். பயப்படாதே, தியாமத்தின் மண்டையை நீ உடைப்பாய், மந்திரத்தால் நீ அவள் மீது வெற்றி கொள்வாய். அவசரமாகப் புறப்படு. அவளால் உன்னைக் காயப்படுத்த முடியாது. நீ திரும்பி வருவாய். போய் வா’ என்று அன்ஷார் கூறினன். - - மெரோடாக், தேவர் மகாசபையைக் (உப்ஷின கு) கூட்டினன். அவர்களும் அன்ஷாரின் விருப்பத்தை ஆதரித்த தால், தானே தேவசேஞபதியாகி தியாமத் மீது படை 99