பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெடுத்துச் செல்வதாகக் கூறினன். அவர்கள் மெரோ டாக்கை தங்களது தலைவனுகவும், தேவசேனபதியாகவும் நியமித்தனர். அவர்கள் கூறியதாவது:

  • விண்ணவர் அனைவரினும் நீ மேலானவன். உன்னுடைய கட்டளை அனு'வின் கட்டளையாகும். தேவர் களைப் பதவியில் உயர்த்தவும், தாழ்த்தவும் உனக்கு அதிகாரம் உண்டு. உன்னுடைய அதிகாரத்திற்கு எதிராகத் தேவர்களாகிய நாங்கள் எதுவும் செய்யமாட்டோம். இப்பிரபஞ்ச முழுவதையும் ஆளும் உரிமையை உனக்கு நாங்கள் அளிக்கிருேம். உனது ஆயுதங்களை யாரும் எதிர்த்து நிற்க முடியாது. கலகம் செய்யும் தேவர்களை வீழ்த்து. உன் மீது நம்பிக்கை கொண்டு உன்னைப் பணிபவர்களைக் காப்பாற்று.”

ஒரு துணியைக் கீழே விரித்து அவனை அதைப் பார்த்து வாயால் ஊதச் சொன்னர்கள். அவன் அவ்வாறே செய் தான். துணி மறைந்து போய்விட்டது. பின் வா’ என்று கூப்பிட்டான். துணி தரையில் கிடந்தது. இந்த அடையாளத்தைக் கண்டதும் தேவர்கள் 'மன்னன் வாழ்க!” என்று ஆர்ப்பரித்தனர். மெரோடாக்கின் யுத்தத் தயாரிப்புகளை இனி மூலக்கதை மிக விரிவாகக் கூறுகிறது. அதனைச் சுருக்கமாகக் கூறுவோம். வில்லையும் அம்புருத்துரணியையும் அவன் தோளில் மாட்டிக் கொண்டான். கையில் கதையை எடுத்துக் கொண்டான். அனு அவனுக்கு ஒரு வலையைக் கொடுத்தான். மெரோடாக் ஏழு காற்றுக்களை உண்டாக் கினுன். அவை அவனைப் பின்தொடர்ந்து சென்றன. இடி மின்னல் ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்டான். விஷ மூச்சுவீசும் நான்கு குதிரைகள் கட்டிய தேரில் குதித்தேறி அமர்ந்தான். அவன் தேரில் முன் செல்ல தேவர் படை பின் தொடர்ந்தது. அவன் தியாமத்தின் மறைவிடத்திற்குப் போய்ச் சேர்ந்தான். கிங்குவும், தியாமத்தும் பேசிக்கொண்டிருந் 星每拿