பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தார்கள். ஒரு விடிை அவன் தயங்கினன். இதற்குள் அவள் அவனைப் பார்த்து விட்டாள். உறுமிக் கொண்டே ஒடி வந்தாள். அவன் அவளைப் படைதிரட்டிக் கொண்டு போருக்கு வருமாறு அழைத்தான். ஆனல் அவள் நேரில் அவனே நோக்கி வந்தாள். மெர்ோடாக் அனு தனக்குக் கொடுத்த வலையை வீசினன். அவள் தன் வாயைப் பிளந்தாள். அது ஏழு மைல் அகல் மிருக்கும். அவள் வாயை மூடிவிட முடியாமல் மெரோடாக் காற்றை அவள் வாயினுள் வீசுமாறு கட்டளையிட்டான். காற்று வீசியது. திறந்த வாயை அவளால் மூட முடியவில்லை: அவளது இதயம் வலிமை குன்றியது. அவள் மூச்சுத் திணறினுள். மெரோடெக் அவள் வயிற்றை நோக்கி ஓர் அம்பை எய்தான். அது அவள் வயிற்றைக் கிழித்து, இதயத்தையும் துண்டாக்கியது. தியாமத் இறந்து பேர்டுள், அவளுடைய படைகள் சிதறியோடின. மெரோடாக் இறந்து போன கிங்குவிடமிருந்து விதி ஒட்டை எடுத்துக் கொண்டான். அவன் தியாமத்தின் மண்டையை உடைத்து அவளுடைய இரத்தம் பூமியில் படாதபடி காற்றினல் மறைவிடங்களுக்குக் கொண்டு செல்லச் செய்தான், அவளுடைய உடலை இரு பகுதிகளாக வெட்டி, ஒரு பகுதியைப் பூமியாகவும் மற்ருெரு பகுதியை வானமாகவும் படைத்தான். தேவர்களுக்குப் பதவிகள் அளித்து அவர் களைப் பதவியில் அமர்த்தின்ை. ஒவ்வொரு நூலுக்கும் ஒரு தேவனை அதி தேவதையாக்கினன். சந்திரன நாள்களை அளக்கும்படி நியமித்தான். அவனது தந்தை இயா மனிதன் உலகில் தோன்ற வேண்டும் என்று எண்ணின்ை. இதை யறிந்து மெரோடாக் அவனிடம் கூறினன். 'என்து இரத்தத்தைச் சிந்தி எலும்பை உண்டாக்குவேன். வுலகை நிரப்ப மனிதனைப் படைப்பேன். தேவர்கள் த.த-7 Ho I