பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணங்கவும் அவர்களுக்குக் கோவிலைக் கட்டவும் மனிதன் தேவையல்லவா?” வேருேர் கதையில் சிப்பார் என்னும் தேவர்களின் அரசி மேரோடாக்கோடு சேர்ந்து மனிதனது விதை'யைப் படைத் தாள் என்று கூறப்பட்டுள்ளது. . ஏழாவது சாசன ஒட்டில் அவன் ஐம்பத்தொரு பெயர் கனால் தேவதேவன் என்றழைக்கப்படுகிருன். எல்லாத் தேவதைகளும் மெரோடாக்கின் அம்சமென அப்பகுதி கூறுகிறது. இக்கதைக்கு முன்னர் சுமேரியக் கதையொன்றிருந்தது என்று சுமேரிய நாட்டுக் கதைகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன் சுருக்கம் வருமாறு: 'காடுகளிலும், கடலிலும், பயங்கர ராட்சஸ் மனித விலங்குகள் வாழ்ந்தன. அவை மலையில் வாழ்ந்த வீரர் களுடன் பகைமை கொண்டிருந்தன. வீரர்களின் மன்னனை இயா மனிதர்களின் விரோதிகளான இவ்விலங்குக் கூட்டத் தின் மீது படையெடுத்துச் சென்று அவற்றின் தலைவனை அப்ஸ் இவையும், அவன் மகளுன மும்முவையும் கொன்ருன். ஆளுல் மிகவும் சக்தி வாய்ந்த தியாமத் என்னும் உலக மாதா இன்னும் உயிரோடிருந்தாள்; தனது உறவினர்களின் சாவிற்காக அவள் பழிவாங்கத் துடித்தாள். இயா அவளோடு போரிடத் தயாரிப்புச் செய்தான். சாதாரண மான ஆயுதங்களால் அவளேக் கொல்ல முடியாது. அவளுடைய மந்திர சக்தியும், தந்திரத் திறமையும் அவளே யாராலும் வெல்ல முடியாதவளாக்கியது. இயா மந்திர வசியங்களையும், செய்வினைச் செயல்களையும் அவளுக்கு எதிராகச் செய்து பார்த்தான். அவற்ருல் அவளே எதுவும் செய்துவிட முடியவில்லை. அவளுடைய உயிர் நிலை அவளுடைய கல்லீரலில் இருந்தது. அவளுடைய வயிற்றில் குத்தி கல்லீரலைக் கிழித்தால் அவள் இறந்து போவாள். இதனைத் தான் பாபிலோனியக் கதையில் மெரோடாக் செய்தத்ாக நாம் கண்டோம். A £2