பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக் கதையில் தியாமத் தனது கணவனையும், மகனையும் விட வலிமைமிக்கவள் என்பது கூறப்பட்டிருப்பது முக்கிய மானது. இக்கதை மெரோடாக் சிறு தெய்வமாயிருந்து தனிப் பெரும் தெய்வமானதைக் கூறுகிறது. அவனே தனிப்பெருங் கடவுளாக வழிபாடு செய்யப்பட்ட காலத்தில் இக்கதை எழுந்திருக்க வேண்டும். இது அரசும், ரசனும் பாபி லோனிய சமுதாயத்தில் தோன்றிய காலத்தில் தான் தோன்றியிருக்க முடியும். இக்கதையை ஆண் ஆதிக்க சமுதாயத்தில், ஆண் வலிமை போற்றப்பட்ட காலத்தில் அச்சமுதாயத்தின் கவிஞர்கள் உருவாக்கியிருத்தல் வேண்டும், மாரோடாக் மர்டாக் என்ற பெயரிலும், எல் என்ற பெயரிலும், பாபிலோனியாவிற்கு வெளியே உள்ள நாடுகளில் பிற்காலத்தில் வழிபாடு செய்யப்பட்டான். w இவன் ஏகநாயகன், தனிப்பெரும் தேவன் என்று கருதப் பட்டாலும், அவனுக்குத் தந்தையும் பாட்டனும் இருந் தார்கள். அவர்களுக்கு பகைவர்கள் இருந்தார்கள். அப் பகைவர்கள் பெண்ணுதிக்க, பெண்ணுரிமைப் பண்பாட்டினை உடையவர்கள். தியாமத் தான் அவர்கள் எல்லோருக்கும் தாய். இவளே அன்ஷாராலும், இயாவாலும் கொல்ல முடியவில்லை. மொரோடாக்தான் அவளேக் கொல்லும் அளவுக்கு வலிமையும் வீரமும் உடையவனக இருந்தான். மெரோடாக் உலகைப் படைத்தான். மனிதர்களைப் பண்டத்தான். ஆயினும் அவனுக்கு முன்கடலும், வானமும், தேவர்களும் இராட்சஸர்களும் இருந்தனர். கடலையும், வானையும், தேவர்களையும் ராட்சஸர்களையும் தியாமத்தான் படைத்தாள். அவளுக்கு அப்ஸ் இ என்ற கணவன் இருந்: தான். தேவர்கள் அவனைக் கொன்ற பிறகு கிங்கு என்ற வேருேர் கணவனே அவள் நியமித்துக் கொண்டாள். அவனுக்கு அவளே உலகத் தலைமையை அளித்தாள். எனவே உலக ஆதிபத்திய உரிமை அவளிடம்ே இருந்தது. 103