பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோன்றி மாறி, வளர்ந்த முறைகளுக்கும் விளக்கம் காண்பது எளிதாகும். இக்கதைகள் வரலாற்றின் முற்காலத்தைக் குறித்தவை. இவற்றுள் வரலாற்று மனிதர்கள் எவரும் பங்கு கொள்ளுவ தாகக் கூறப்படவில்லை. தியாமத் மனிதர் படைக்கப்படுமுன் கொல்லப்பட்டு விட்டாள், மெரோடாக்கின் கதை மனிதன் படைக்கப்படுமுன் முடிந்து விடுகிறது. ஆஞ்ல் இத்தகைய மெரோடாக்கை வழிபட்ட மனிதர்கள் தான் கற்பனேகளா லும், தங்கள் காலத்திற்கு முன்பிருந்த கதைகளே இனத்து மாற்றிப் படைத்தார்கள். அவர்கள் காலத்தில் எழுத்துத் தோன்றவில்லை. இது வாய்வழியாகப் பரம்பரை பரம்பரை யாக வழிச் செலுத்தப்பட்டது. எழுத்து தோன்றிய பின் எழுதப்பட்டு, படைப்புக் கதையாக அளர்ைபானிபால் காலத்தில் பாதுகாக்கப்பட்டது. அவ்வாருளுல் இக்கதையின் முக்கியக் கூறுகள் வரலாற்றுக்கு முற்காலத்தில் பல கட்டங்களில் தோன்றிக் காலப் போக்கிலும், சமுதாய மாற்றங்களின் போக்கிலும் மாறி வளர்ச்சியடைந்து மெரோடாக்கின் கதையாக முழுமை பெற்றிருத்தல் வேண்டும். - இக்கதையின் கூறுகள் எந்நிலைமைகளில் தோன்றின என்ற வினவிற்கு விடைகாண வரலாற்று முற்காலப் பண்டைச் சமுதாயங்களின் வளர்ச்சி முறையை அறிதல் வேண்டும். டார்வினது உயிரினங்களின் தோற்றம்" என்ற நூல் வெளியான பின்னர் பல உயிரினங்கள் அவ்வவ்வாறே படைக் கப்பட்டன என்ற கருத்து தோல்வியடைந்தது. சிற்துயிர்கள் சூழ்நிலைக்கேற்றபடி தம்மை மாற்றிக் கொள்வதால் அவை படிப்படி மாற்றம் அடைந்து பல்லுயிர்க்கணங்கள் தோன்றின என்ற பரிணுமக் கருத்து விஞ்ஞான ரீதியா நிரூபிக்கப் பட்டது. அதிலிருந்து உயிரின வளர்ச்சிக் கருத்து விஞ்ஞா னத்தில் ஆதிக்கம் பெற்றது. எல்லாற் துறைகளிலும் இப் 49%