பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்கள் அழைக்கின்றன. தமிழ் நாட்டின் இருபெருஞ் சமயங்களும் இவைேடு தங்கள் தனிப்பெரும் தெய்வங்கள் உறவு கொண்டுள்ளதாகக் கூறும் அளவிற்கு இக்கடவுள் அல்ாக்கம் பெரிதும் செல்வாக்குப் பெற்றிருந்ததென்று நாம் அனுமானிக்கலாம். இவனுக்கு சேவல் கொடியும், பாம்பு இலச்சினையும் உள்ளன, மயில் இவனது ஊர்தி. இளமை இவனது தன்மை. நோய் போக்குதல் இவரது சக்திகளுள் ஒன்று. தற்கால ஆராய்ச்சியாளர்களில் ஆராவமுதன் இவ் வணக்கத்தின் தன்மையை விளக்கியுள்ளார். ஸ்கந்தன்' என்ற தெய்வம் பல தெய்வங்களின் தன்மை கொண்டுள்ள தென்றும், ரிக்வேத காலத்திலேயே இத்தெய்வ வணக்கம் தோன்றி விட்டதென்றும் அவர் கூறுகிருர். டயோனிஸாஸ் என்ற கிரேக்க தெய்வத்திற்கும், ஸ்கந்தனுக்கும் இடையே உள்ள பல ஒற்றுமைகளே அவர் சுட்டிக் காட்டுகிரு.ர். சோமம் என்பது ஒரு மது. ஸ்கந்தன் அதன் களிப்பின் உருவம். அது போலவே பாக்கு ஸ்டயணிஸாஸ் என்ற கிரேக்க தெய்வம் ஒயின்’ என்னும் மதுவோடு தொடர் புடையவன். பாக்குஸ் தனது தந்தை தொடையினின்றும் பிறந்தான். சோமனும் அவ்வாறே பலியிடும் ஹோதாவின் தொடையினின்றும் பிறக்கிருன். பாக்குஸ் அக்கினி குமாரன். ஸ்கந்தனும் அவ்வாறே. இருவரும் பொய்கையில் வளர்ந்த வர்கள். பாக்குஸ் சோம்லே என்ற பொய்கையிலும் ஸ்கந்தன் சரவணம் என்ற ஹேமாலயத்திலும் வளர்ந்த வர்கள். சோமா என்னும் மது உற்சாகத்தையூட்டுவது போல ஸ்கந்தன் வாழ்க்கையில் மகிழ்ச்சி பூட்டுகிருன். வெறியாட்டில் களிப்பை உண்டாக்குகிமுன். பாக்குஸ் கன்னியரோடு களித்து அலைகிருன், சோம்னும் அப்படியே. பாக்குஸ் டயான (Moon) வோடு சுந்தியலைகிருன். பாக்குள், சோமனப் போலவே அறிவுத்தானம் செய்கிருன், கிரேக்கத்தின் மதுக்கடவுள் பாக்குஸ் டயோனிஸாஸைப் போலவே, குமரன், முருகன் என்றழைக்கப்படும் ஸ்கந்தனது