பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிணுமம் அடிப்படை உண்மையாக ஏற்றுக் கோள்ளப் பட்டது. இதுவரை மனிதனது சமுதாயங்களைத் தனித்தனியாகக் கருதி வந்த மானிடவியலும், சமூகவியலும் இக்கருத்தின் அடிப்படையில் ஆய்வுகள் தொடங்கின. உலகப் படைப்புப் போலவே, சமூகப் படைப்பையும் கருதிவந்த அறிஞர்களின் கருத்துக்களோடு, சமுதாயப் பரிணும'வளர்ச்சி என்ற கருத்து மோதியது. இதுபற்றி கார்டன் சைல்டு பின்வருமாறு கூறுகிருர்: 18 ஆம் நூற்ருண்டில் ஐரோப்பிய சமுதாயத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட சமுதாயங்களை ஆய்வாளர்கள் கண்டனர். அவர்களை நாகரிக மற்றவர் (Savages) என்றழைத் தனர். அவர்களுள்ளும், சமூக அமைப்பு. தொழில் துணுக்கம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பல வேறு பாடுகள் இருப்பதைக் கண்டனர். சில ஆய்வாளர்கள் லாவேஜ்களிலும் ஏற்றத் தாழ்வான நிலைகள் இருப்பதைக் கண்டு வேறுபட்ட நிலைகளை வரையறுத்தனர். 1768இல் பெர்குலன், லாவேஜரி என்ற நிலையைப் பார்பரிசத்தி லிருந்தும் இரண்டையும் நாகரிக நிலையினின்றும் வேறு படுத்திக் கண்டார். இவை யாவும் தொடர்பற்ற தனித் தனியான அமைப்புகள் என்று அவர் கருதினர். உயிரினங்கள் தனித் தனியாகப் படைக்கப்பட்டன என்ற பைபிள் ஆதியாகம கருத்தை யொத்து சமூகங்களும் தனித்தனியாக ஒன்றில் இருந்து ஒன்று தோன்ருமல் தனித் தனியாகத் தோன்றியவை என்பது தான் அவருடைய கருத்து. அவர் காலத்து மானிடவியல், சமூகவியல் அறிஞர்களும் அவ்வாறே கருதினர். பரிணும வளர்ச்சிக் கொள்கை தோன்றிய பின் அறிவுலகம் சமுதாயங்களின் வேறுபாடுகளை அக்கொள்கை யின் சிந்தனைகளின் அடிப்படையில் சிந்திக்கத் தொடங்கியது. இது சமூகவியலிலும், மானிடவியலிலும் ஏற்படாமல், தத்துவத்தில் தொடங்கியது.1850இல் ஹெர்பர்ட் ஸ்பென்சர் {06