பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இச்சிந்தனை மாற்றத்தைத் தோற்றுவித்தார். அவர் அங்க ஜீவிகளுக்கும், சமூகங்களுக்கும் ஒரு பொருத்தப்பாட்டை (Analog) எடுத்துக்காட்டினர். அங்கஜீவிகள் சூழ்நிலையின் தொடர்பாலும் மாற்றுச் செயல்களாலும் (Mutual interactions) வளர்கின்றன. அது போலவே சமுதாயங்களும் குழ்நிலையோடு மாற்றுச் செயல் புரிவதால் வளர்கின்றன என்ற புரட்சிகரமான கருத்தை வெளியிட்டார். வளர்ச்சிக் குரிய காரணங்கள் இவ்விரண்டிற்கும் வேறு வேருனவை. தற்காலத்திலுள்ள லாவேஜ், பார்பரிசம் ஆகிய வளர்ச்சி நிலைகளிலுள்ள சமுதாயங்கள் அவ்வவ்வளர்ச்சிகளில் வளர்ச்சி தடைப்பட்டு நிற்கின்றன. முழுமையாக எல்லாச் சமுதாயங் களேயும் கருத்தில் கொண்டால் பரிணுமச் செயல்பாட்டை நாம் காணமுடியும். தனித்தனி சமுதாயத்தை மட்டும் ஆராய்ந்தால் இப்பரினம வளர்ச்சிப் போக்கைக் காண்பது இயலாது. இது ஸ்பென்சரின் கருத்து. எனவே சமூக மானிடவியல்களில் ஒப்பீட்டு ஆய்வு முறையின் தேவையை ஸ்பென்சர் வலியுறுத்தினர். பண்டைக்கால சமுதாயகி களைப் பற்றிக் கற்பனையான வளர்ச்சிக் கட்டங்களை வரை யறுத்துக் கொண்டு தடம் புரண்டு வழி கண்டுபிடிக்க வியலாமல் குழம்பி நின்ற மானிடவியலாளருக்கும் சமூக வியலாருக்கும், அவர் தற்காலத்தில் சமூக வளர்ச்சியில் பின் தங்கி ஸாவேஜ் நிலையிலும், பார்பரிஸ் நிலையிலுமுள்ள பழங்குடி மக்களது சமுதாயங்களே ஒப்பியல் ஆய்வு செய்து, அவற்றை முற்கால மக்களது தொல்பொருள் எச்சங்களோடு (அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கும்) ஒப்பிட்டுப் பழங்கால சமுதாயங்களின் வளர்ச்சி நிலை, சமுதாய அமைப்பு, பண்பாடு முதலியவற்றை அறிந்து கொள்ளவேண்டும் எனப் போதித்தார். இதன் மூலம் உலக சமுதாயங்களின் ஒற்றை வழி வளர்ச்சிப் போக்கில் வளர்ந்துள்ளதை அனுமானம் செய் வதற்குரிய ஆதாரங்கள் கிடைக்குமெனக்கூறினர். 1891இல் வெளியான பண்டையச் சட்டம் (Ancient law) என்ற ஹென்றி மெய்னியின் நூலிலும், திருமண நிறுவனம்’ (The Institution of marriage) arsip QuáQasagafia ţg7