பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்றுகளே அகழ்வாராய்ச்சி அளிக்க முடியும். அவர் மா னிட வியலையும் சமூகவியலையும் பிறவய ஆராய்ச்சியாக மாற்றும் வழியைக் காண்பித்தார். பழைய பண்பாட்டை அறியக் கருவிகள், மற்றும் பண்டைய மக்கள் பயன்படுத்திய பொருள்களைச் சான்று களாகக் கொண்டதால், சமுதாயவியலை ஒரு புறவியல் விஞ்ஞானமாக அவர் மாற்றி விட்டார். இக்கருவிகளின் வளர்ச்சியை அகழ்வாராய்ச்சிச் சான்றுகளின் மூலம் கண்டு பொருளுற்பத்திச் சக்திகளின் பெருக்கத்தை உய்த்துணர்ந்து, அதன் உற்பத்தி விநியோகம் ஆகிய சமூகச் செயல்களுக்கான சமுதாய நிறுவனங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தன என்பதையும் அவை பண்டைக்கால முதல் அடைந்த மாற்றங் களால் ஏற்பட்ட சமுதாய பரிணுமத்தையும் காணவேண்டும் என மார்கன் போதித்தார். இப்பரிணுமத்தின் அடிப்படை யிலேயே கருத்துக்கள், நம்பிக்கைகள், சமயங்கள், சட்டங்கள் எல்லாம் தோன்றுகின்றன. எனவே கருத்துக்களின் உற்பத்தி, சமுதாய பொருளுற்பத்தி முறையோடும் அச்சமுதாயத்தில் மக்கள் ஒரு பிரிவினரோடு மற்ருேர் பிரிவினர் கொள்ளும் உறவுகளிலிருந்தும் தோன்றுவதாகும். 'கார்ல் மார்க்சும், பிரடரிக் எங்கல்சும் மார்கனுடைய பண்டைய சமுதாய திட்டத்தை ஏற்றுக்கொண்டதால் அவருடைய மானிடவியல் கொள்கைகள் பெரிதும் ஆற்றல் பெற்றன. இது தற்செயல் நிகழ்ச்சியன்று. 1859லேயே மார்க்ஸ் பொருள் முதல்வாத வரலாற்றுக் கொள்கையை வெளியிட்டார். இவ்வாண்டில்தான் டார்வினது உயிரினங்களின் தோற்றம் வெளிவந்தது. அகழ்வாராய்ச்சி யாளர்களான ஜான் இவான்ஸ், ஃபால்கோனர், ப்ரெஸ்ட்விச் ஆகியோர் பண்டைக்கால மனிதனது வாழ்க்கையை அறிய உதவும் அகழ்வாராய்ச்சிச் சான்றுகளை வெளியிட்டு பிளிஸ்டோஸின் மனிதனைப் பற்றிய விவரங்களை எழுதினர். ” . இத்தகைய சான்றுகளிலிருந்து மார்க்சும் ஏங்கல்சும் தங்கள் சமுதாய வளர்ச்சி பற்றிய கருத்துக்களை உருவாக்கி 盪證發