பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியிட்டனர். ஒரு சமுதாயத்தின் அமைப்பு, அடிப்படை யில் அச்சமுதாயத்தின் உற்பத்தி முறையைப் பொறுத்திருச் கிறது. உற்பத்தி முறை, உற்பத்தியில் பயன்படும் உற்பத்திச் சாதனங்களைப் பொறுத்தது. சமுதாயத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட தேவைகளை நிறைவு செய்து கொள்ளுவதற் காக, சமுதாயத்தின் ஆளுகையில் இருக்கும் தொழில்துணுக்க சாதனங்களையும், சக்திகளையும் பொறுத்தே உற்பத்தி முறை இருக்கமுடியும். நாகரிக சமுதாயங்களின் வரலாற்றுச் சான்றுகளைக்கொண்டு இக்கொள்கையை அவர்கள் வரை யறுத்துக் கூறினர்கள். மார்க்ஸ் எழுத்தறிவில்லாத வரலாற்று முற்கால சமுதாயங்களின் மாறுதல்களை ஆராயும் பொழுது மார்கனது கொள்கையை ஏற்றுக்கொண்டார். மார்கன், பொருள் முதல்வாத வரலாற்றுக் கொள்கையை வலியுறுத்தும் சான்றுகளைத் திரட்டித் தந்திருந்தார். மார்கனுடைய சமூகப் பரிணுமக் கொள்கை மார்க்ளின் வரலாற்றுக் கொள்கையோடு நெருங்கியதாயிருந்தது. எங்கல்ஸ் ஒரு சமுதாயம் மற்ருேர் சமுதாயமாக மாறுவதை மார்கனது திட்டத்தோடு, உற்பத்திச் சக்திகளின் மாற்றம் என்னும் கருத்தை இணைத்தார். இவ்வாறு செய்யும் பொழுது மார்கனது திட்டத்தில் எங்கல்ஸ் சில திருத்தங்களைக் கொணர்ந்தார். இது தமது கொள்கைக்கேற்றபடி மார்கனது கொள்கையை மாற்றியதாக இல்லை. ஐரோப்பாவில் வரலாற்று அகழ்வாராய்ச்சி முடிவுகளைப் பற்றிய அவருடைய ஆழ்ந்த அறிவின் ஒளியில் மார்கனது திட்டத்தை மாற்றினர். எனினும் மார்கனது திட்டத்தின் அடிப்படை அம்சங்களே அவர் ஏற்றுக் கொண்டார். ” இவ்வாராய்ச்சிகளின் அடிப்படையில் தாம்ஸன் தற்கால இனக்குழு மக்களின் சமுதாயங்களின் வளர்ச்சி நிலைப்படிகளை வரையறுத்தார். 1. கீழ்நிலை வேட்டைச் சமுதாயம் தொழில்-உணவு சேகரித்தல்-வேட்டையாடுதல். - - 440