பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழலாக படைத்த முற்காலத் தேவருலகிலும் தாயையே மூல புருவியாகக் கருதினர். ஆனல் தியாமத்தை ஒரு ராட்சசியாகவும் அவளே எதிர்த்துக் கென்றவனைத் தேவனகவும் ஏன் இக்கதையில் படைத்தார்கள்? பாபிலோனியாவில், நாகரிகத் துவக்கத்துக்கான உற்பத்திச் சக்திகள் பெருகி, நாட்டை ஒன்ருக்கி அரசு தோன்றுவதற்கு இரு முறையான தாய் வழி, தந்தைவழிச் சமுதாயங்களை இணைக்க வேண்டும். தந்தை வழிச் சமுதாயம் மேய்த்தல், விவசாயம், உலோக உபயோகம் இவற்ருல் வளர்ச்சி பெற்றுவிட்டதால் தேங்கி நின்று புராதன விவசாய நிலையிலும், விவசாய நிலையிலும், வேட்டை நிலையிலும் இருந்த தாய்வழிச் சமுதாயத்தை அழிக்கப் போர் செய்ய வேண்டும். தாய்வழிச் சமுதாயம் தங்கள் முன்னேற்றத்திற்கு இடையூறெனக் கருதிய தந்தை வழி மக்கள் அதனை அழிக்கச் செய்த போர்கள், இக்கதை தோன்றுவதற்கு முன்பே நடை தியாகத் அதற்கு முன்னரே தாய்வழிச் சமுதாயத்தால் வணங்கப்பட்ட தெய்வம். அச் சமுதாயத்திலிருந்தே, உற்பத்திச் சாதன வளர்ச்சியால் பிரிந்து தந்தை வழி முறையைக் கொண்டு வளர்ச்சி பெற்று வலிமை பெற்ற சமுதாயத்தில் ஆண் தெய்வங்களைப் படைத்து மக்கள் வழி பட்டார்கள். - இவ்விரு சமுதாயங்களின் பகைமை தியாமத்தேவர்கள் பகைமையாக வருணிக்கப்பட்டது. தியாமத் மிகப் பழங்கால தெய்வமாதலால் அதற்குப் போர்க் கருவிகள் எதுவுயில்லை. அதுவே ஆளுகிற ஆண்களே நியமித்தது என்ருல் அது சர்வல்லமையுடையது. அது உலகைப் படைக்க அப்லல் துணையாயிருந்தான், அவன்

  • 2: