பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறந்தபின் அவள் கிங்குவைத் துணையாக்கிக் கொண்டாள். இவையெல்லாம் தேவர்கள்-தாய்த் தெய்வம் என்ற கதை மாந்தர்களின் செயல்களாகக் கூறப்பட்ட போதிலும், தாய் வழிச் சமுதாயத்தில் நிகழ்கிற செயல்களே. தியாமத் உலகையும், மக்களையும், உயிரினங்களையும் படைக்கவில்லை என்று இக்கதை கூறுகிறது. ஆனல் அவளிட மிருந்தே உலகம் தோன்றியதாக தாய்வழி மக்கள் நம்பினர். எனவே இக்கதை புனைந்தவர்கள் அவளே குழப்பத்திலிருந்து வானேயும் கடலையும் படைக்கச் செய்தனர். தேவர்களையும் படைத்தவள் அவளே. முந்திய கதையின் படைப்புத் தாயை, அவளோடு பகைத்து நின்ற தேவர்களும் ஒப்புக் கொண்டனர். ஏனெனில் பாபிலோனியா முழுவதும் முதற் படைப்புத் தெய்வமாக இருந்த தியாமத்தை பிந்திய படைப்புக் கதையில் ஒதுக்கிவிட முடியாது. ஆனல் ஆளுதிக்க சமுதாயத்திற்கு பல நகர ராஜ்யங் களே இணைக்கிற வலிமைமிக்க ஒரு தேவன் தேவை. எனவே மெரோடாக் ஆயுதங்கள் தரித்தவன். தலைக்கவசம் தரித்தவன். புயல் போன்ற குதிரைகள் கட்டிய தேரில் போருக்குச் செல்லுகிருன். இது வளர்ச்சியடைந்து உலோக உபயோகம், சக்கர உபயோகம், விலங்கு பழக்கல் முதலிய வற்றைத் தெரிந்துகொண்ட மக்களின் கற்பனை என்பதில் ஐயமில்லை. தியாமத் மெரோடாக் போரில், மொரோடாக் பயன்படுத்திய வலை, ஈட்டி, கத்தி ஆகியவை, மீன் பிடித்தல், வேட்டையாடுதல், முதலியவற்றில், முன்னேறிய தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்திய மக்களின் சிந்தனையைக் காணலாம். தியாமத் வாயைப் பிளந்ததும், மெரோடாக் காற்றை அவள் வாயினுள் புகும்படி ஆணையிட்டான். காற்ருடிகள் (Windlass) மூலம் நீரிறைக்கும் தொழில் நுணுக்கம் தெரிந்தவர்கள் காற்றைத் தங்கள் ஆணைக்குட்படுத்தலாம் என்று கருதினர். அதல்ை தான் அவர்கள் கற்பனையில்

  • I fi