பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல தன்மைகள் இருப்பதை ஆராவமுதன் சுட்டிக்காட்டி, இக்கடவுள் தமிழகத்திற்கும், கங்கைச் சமவெளிக்கும் மட்டு மல்லாமல், கிரேக்க நாட்டிற்கும் பொதுவானவன் என்று கூறுகிருர், அது மட்டுமல்லாமல் பழைய ஏற்பாட்டில் வரும் தீர்க்கதரிசி மோசஸ் பல தன்மைகளில் ஸ்கந்தனது தன்மை களோடு ஒன்றுபடுகிருன். இவனது காலம் கி. மு. 1200. மோசஸ் தெய்வத்தன்மை குறைந்து, மனிதத் தன்மை மிகுந்தவனாகச் சித்திரிக்கப்பட்டாலும், ஸ்கந்தனது பண்புகள் பல அவனுக்கிருந்ததாக பழைய ஏற்பாட்டு வரலாறுகள் கூறும். இருவரும் கடவுளுக்குப் பிரியமானவர் களே (இஸ்ரலேட்டுகள், தேவர்கள்) அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, சுதந்திர வாழ்விற்கு அழைத்துச் செல்லக் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள், நீரருகே புல்லில் இவர்கள் உருவானுர்கள். மோசஸுக்கு ஆரன் என்ற படைத் தலைவன் இருப்பது போல, ஸ்கந்தனுக்கு விசாகன் என்ருேர் படைத் தலைவன் இருக்கிருன். மோசஸ் எகிப்தில் பிறந்த, தல்ை ஆண்மக்களுக்குத் தீமை விளைப்பவன். ஸ்கந்தனுக்கு அதே போல சக்தியுண்டு. கிருஹ’ எனப்படும் பல பேய்க்கணங்கள், குழந்தைகளுக்குத் தீமை விளைவிப்பதற்காக அவளுேடு கூடவே இருக்கின்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன. மோஸ்ஸ்,ஸ்கந்தன் கிரவுஞ்ச கிரியோடு போராடியது போல பாறையோடு போராடுகிருன். இளமை, உற்சாகம், மதுவெறி, அழகுணர்ச்சி, காதல் வீரம், தீமையை ஒழிக்கும் தன்மை, பிறரைக் காத்து நிற்கும் பண்பு, இவற்றையெல்லாம் திரட்டி தெய்வ வடிவாக உலகில் பல பாகங்களிலும் இலக்கியம் செய்திருக்கிருர்கள் பண்டைக் கால மக்கள். இவர்களுள் இந்திய தெய்வங்கள் ஸ்கந்தனும் முருகனும் ஆவர். - - இத்தகைய இந்தியக் கடவுளரின் வடிவங்களைப் பற்றிச் சிற்சில அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் கிடைக்கின்றன.