பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெரோடாக் காற்றைக் கட்டளையிட முடிந்தைதக் கருத் முடித்தது. ... -- தியாமத்தின் உடலிலிருந்து பூமியையும் ஆகாயத்தையும் மெரோடாக் படைத்தான். இதிலிருந்து பூமியும், வானமும் தாயின் உடலிலிருந்து தோன்றியவை என்பது மெரோடாக்கை வணங்கியவர்களது கருத்து என்று தொன்று கிறது. மெரோடாக் மனிதனைப் படைத்ததாகக் கதை கூற வில்லை. ஆளுல் அவனை எல்லாத் தெய்வங்களுக்கும் சக்தி வனிக்கும் ஒரே தேவன் என்று ஒரே நாடாகப் பாபிலோனியா இணைந்த பின் கருதிய மக்கள் அவன் மனிதனைப் படைக்க எண்ணினுன் என்று கதையை முடித்து விட்டனர். தேவர்கள் இருந்தால் போதுமா ? அவர்களுக்குக் கோவில் கட்டி வணங்க மனிதர்கள் வேண்டாமா ? இதல்ை தங்களே வணங்க மனிதனைப் படைக்க மெரோடாக் எண்ணிஞன் என்று கதை கூறுகிறது. ஒரு குறிப்பிட்ட சமுதாய நிலைமையில் அதற்கு முன் நிெைபற்றிருந்த சமுதாயங்களில் தோன்றியிருந்த மக்கள் நம்பிக்கைகளால் படைக்கப்பட்ட தெய்வங்களில் ஒன்றை யொன்று கொன்ற பிறகு எஞ்சியிருந்த தெய்வம் மனிதனைப் படைக்க எண்ணியதாகத் தங்கள் கற்பனையில் வரலாற்று முற்காலச் சிந்தனைகளைப் பண்டைய பாபிலோனியர் தலைமாற்றிக் கொண்டார்கள். . இதுவே மிகப் பழமையான படைப்புக் கதையின் மானிடவியல்-சமூகவியல் விளக்கமாகும். . ஒரு கதையை இவ்வாறு விளக்கிவிட்டால் மற்றக் கதை களே இவ்வளவு விரிவாக விளக்கவேண்டியதில்ல்ை. அக்கதை களைக் கூறி அவற்ற்ைப் படைத்தவர்களின் சமுதாய வளர்ச்சி நிலையோடு இணைத்துக் காட்டினல் போதுமானது. எனவே 3 off