பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிவரும் படைப்புக் கதைகளைச் சுருக்கமாகவே விளக்குவோம். கிரேக்கப் புனைகதைகளில் நான்கு வேறுபட்ட படைப்பு வரலாறுகள் கூறப்படுகின்றன. இவற்றைக் காண்போம். 1. ஆதியில் யூரிநோம் என்னும் உலக மாதா குழப்பத்தி லிருந்து அம்மணமாக எழுந்தாள். தனது கால்களைப் பதிக்க இடமில்லாமல் கடலையும், வானையும் பிரித்தாள். கடலின் மீது தனியாகத் தாண்டவமாடினள். அவள் தெற்கு நோக்கி ஆடிக்கொண்டே போள்ை. காற்றுப் புதிதாக எழுந்து அவளைப் பின்பற்றி வீசியது. அவள் காற்றை இரு கைகளாலும் பிடித்துத் தேய்த் தாள். ஒபியான் என்ற பெரும் பாம்பு தோன்றியது. அவள் ஆட, ஆட ஒபியான் அவலுடலைச் சுற்றி வளைத்தான். அசைவில் காம உணர்வு கொண்டு அவளைப் புணர்ந்தான். போரியாஸ் என்ற வடகாற்று அவளைக் கர்ப்பம் கொள்ளச் செய்தது. பெண் குதிரைகள் வடகாற்றடிக்கும் பொழுது தங்கள் உடலின் பின்பாகத்தை அதனே நோக்கித் திருப்ப ஆண் குதிரையை புணராமலேயே கருவுறுகின்றன. பின்னர் அவள் ஒரு புருவின் உருவெடுத்து பிரபஞ்ச முட்டையிட்டாள். அவள் ஆணையை ஏற்று ஒபியான் அதனைச் சுற்றி ஒரு வளையமாகத் தனது உடலை வளைத்துக் கொண்டான். அந்த முட்டையிலிருந்து சூரியன், சந்திரன், கிரகங்கள், உடுக்கணங்கள். பூமி, பூமியிலுள்ள ஆறுகள், மரங்கள், தாவரங்கள், உயிரினங்கள் அனைத்தும் வெளி வந்தன. ஒலிம்பஸ் மலையில் யூரிநோமும், ஒபியானும் வாழ்ந் தனர். 'நான் தான் உலகத்தைப் படைத்தேன்’ என்று கூறி அவன் அவளைச் சீற்றமுறச் செய்தான். அவள் தனது குதிகாலால் அவன் தலையில் மிதித்துக் காயம் உண்டாக் கிள்ை. அவனை உலகின் இருண்ட குகையில் சென்று வாழும்படி விரட்டிவிட்டாள். - - 歸,翻→爵 i 17